வெளியாகும் படங்களை விமர்சனத்தால் வெளுத்து வாங்கும் ப்ளூசட்டை மாறன், பிகில் படத்திற்கு எந்த மாதிரியான விமர்சனத்தை வழங்கப்போகிறாரோ என திகிலடைந்து கிடக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

 

ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் ப்ளூசட்டை மாறனை யூடியூப் பக்கத்தில் ரசிகர்கள் தேடுவது வாடிக்கை. அந்த வகையில் பிகில் படத்திற்கு ப்ளூசட்டை மாறன் இன்னும் விமர்சனம் வெளியிடவில்லை. ஆனால், அவர் இப்படி ஒரு விமர்சனம் தரலாம் என ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

’சுறா, புலி போல இனி விஜய்க்கு மொக்கப்படம் வரக்கூடாது என நினைத்தால் இந்தப்படத்தை அதை விட மொக்கையாக எடுத்து வைத்திருக்கிறார் அட்லீ. படத்தில் ஒரு கேரக்டரில் பெரிய ரவுடியாக வருகிறார் விஜய். ஆனால் அவரை பார்த்தால் நமக்கு சிரிப்பு தான் வருகிறது’’என ப்ளூசட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளது போல் போட்டோக்களை உருவாக்கி உலவவிட்டு வருகின்றனர்.

 

இன்னும் சிலரோ, இதோ இதுமாதிரி இஒரு விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன் என ப்ளூசட்டை மாறன் பேசுவது போல் வீடியோக்களை பதிவிட்டுள்ளனர். அதில் பிகில் படத்திற்கு ப்ளூசட்டை மாறன் விமர்சனம் வழங்குவது போல்,‘’ படம் எப்படிடா இருக்குனா, உள்ளே ஒரே விசில் சத்தம் அடிச்சிட்டு இருக்கு. பார்த்தீங்கள்ல சவுண்ட அப்படின்றான். படம் நல்லா இருக்காடா அப்படினு கேட்டால், அட ஏண்ணே நீ வேற வயித்தெரிச்சல கெளப்புற... உள்ளே அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடிட்டு இருக்காங்கண்ணே படத்த... அப்படிண்றான்’’ என அவர் பேசுவது போல அந்த வீடியோ முடிகிறது. 

 

இதன் அர்த்தம் என்னவென்றால் விஜய் படம் சரியாக இல்லாததால் விஜய் ரசிகர்கள் வேதனை படுவதாகவும், அதை அஜித் ரசிகர்கள் தியேட்டருக்குள் இருந்து கொண்டாடுவதாகவும் அந்த வீடியோவை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.