ன்னாது நம்ம ப்ளூ சட்டை மாறன் தானே எல்லாரையும் கலாய்ப்பாரு, இது என்ன புதுசா இருக்குன்னு யோசிக்கிறீங்களா?. அதற்கான விடை "ஹீரோ" படத்தில் இருக்கு. பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள "ஹீரோ" திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள அந்த படம் வசூல் ரீதியாகவும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயனுக்கு மற்றொரு மாஸ் ஓப்பனிங்காக அமைந்துள்ள இந்த படத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

இதனிடையே, யூ-டியூப்பில் சினிமா விமர்சனம் செய்யும் ப்ளூ சட்டை மாறனை "ஹீரோ" டீம் வச்சி செஞ்சிருக்காங்க. சூப்பர் ஸ்டார் படமானாலும் சரி, புது ஹீரோவின் படமானாலும் சரி கதை மட்டும் நல்ல இல்லை என்றால் கழுவி ஊத்திவிடுவார் நம்ம ப்ளூ சட்டை மாறன். அவருடைய சினிமா ரீவியூவை பார்க்க யூ-டியூப்பில் லட்சக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

ஹீரோ படத்தில் ஒரு காட்சியில் "என்னப்பா ப்ளூ சட்டை, செம்மையா காசு பாக்குற போல" என சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் இணைந்து கலாய்க்கும் காமெடி சீனுக்கு தியேட்டர்களில் செம்ம ரெஸ்பான்ஸாம். அதே மாதிரி இன்னொரு சீனில் நடந்து போய் கொண்டிருக்கும் ஒருவரைப் பார்த்து ரோபோ சங்கர் "யோவ்! ப்ளூ சட்டை" என்று கூப்பிடும் சீனுக்கு சிரிப்பலை விண்ணை முட்டுகிறதாம். இப்படி கிடைச்ச இடத்தில எல்லாம் ஹீரோ டீம், ப்ளூ சட்டை மாறனுக்கு ஆப்பு வச்சிருக்காங்க.

எத்தனை நாள் பகையோ ஹீரோ டீம் மொத்தமா வச்சி செஞ்சிட்டாங்க என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.