புதிய படங்களை ரிலீஸ் செய்கிறேன் பேர் வழி என்ற பெயரில் யூ-டியூப்பில் நாள்தோறும் முளைக்கும் விமர்சகர்கள் ஏராளம். அதில் பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன். தனக்கு தான் எல்லாம் தெரியும் என்ற பெயரில் இவர் கொடுக்கும் விமர்சனங்களை பார்க்க ஏராளமான ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதனால் தானோ என்னவோ சூப்பர் ஸ்டார் முதல் நேற்று அறிமுகமான ஹீரோ  வரை அனைவரையும் தரக்குறைவாக ஒருமையில் பேசி விமர்சித்து வருகிறார். 

பொதுவாக படத்தை பற்றியும் அதில் உள்ள நிறை குறைகள் பற்றியும் விமர்சித்தால் ஒரு சிக்கலும் இல்லை. ஆனால் அதில் நடித்துள்ளவர்களை தரக்குறைவாக விமர்சிப்பது, ரசிகர்களை எரிச்சலடையச் செய்துள்ளது. அந்த வகையில் எல்லை மீறும் ப்ளூ சட்டை மாறனை நெட்டிசன்களும் காய்ச்சி எடுத்துள்ளனர். 

சமீபத்தில் ஜீவா நடிப்பில் ராஜுமுருகன் இயக்கத்தில் வெளியான ஜிப்ஸி திரைப்படத்தை விமர்சித்துள்ளார். ட்விட்டரில் அதிக அளவில் படத்திற்கு நல்ல படியான ரிவ்யூவே கிடைத்துள்ள நிலையில், ப்ளூ சட்டை மாறனின் விமர்சனம் அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. 

தனிப்பட்ட முறையில் நடிகர் ஜீவாவை பரதேசி, பிச்சைக்கார நாய் என அளவுக்கு மீறி பேசியுள்ளார். இதனை சினிமாக்காரர்கள் எப்போது கண்டிக்க போகிறார்கள் என்பது தெரியவில்லை. தொடர்ந்து இதுபோன்ற செயல்களை இவர் தொடர்ந்து செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சினிமா பைரஸிக்கு முடிவு கட்டுவதை போல இதுபோன்ற நெறிமுறை இல்லாத விமர்சகர்களுக்கும் முடிவு கட்டினால் நன்றாக இருக்கும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.