சர்ச்சைக்குரிய திரைப்பட விமர்சகர் 'ப்ளூ சட்டை' மாறன் முதன்முறை கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இசையமைத்து, இயக்கியுள்ள படம் "ஆன்டி இண்டியன்".  இந்த படத்திற்கு தற்போது சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது மட்டும் இன்றி, எப்போது படம் வெளியாகும் என்பது குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. 

சர்ச்சைக்குரிய திரைப்பட விமர்சகர் 'ப்ளூ சட்டை' மாறன் முதன்முறை கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இசையமைத்து, இயக்கியுள்ள படம் "ஆன்டி இண்டியன்". இந்த படத்திற்கு தற்போது சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது மட்டும் இன்றி, எப்போது படம் வெளியாகும் என்பது குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பல படங்களை கழுவி ஊத்தி வரும் ப்ளூ சட்டை மாறன் இயக்கிய 'ஆன்டி இந்தியன்' படத்தை, ஏப்ரல் மாதம் சென்சார் குழுவினர் பார்த்தனர். ஏற்றுக்கொள்ளமுடியாது வசனங்கள் மற்றும் காட்சிகள் இருந்தால், அவற்றை மாற்றவோ அல்லது நீக்கவோ சொல்வது சென்சார் குழுவினரின் வழக்கம். ஆனால் 'ஆன்டி இண்டியன்' படத்தை முழுமையாக நிராகரித்து தடை செய்தனர்.

அதன் பிறகு ரிவைசிங் கமிட்டி என்று சொல்லப்படும் மறு தணிக்கைக்கு இப்படம் அனுப்பப்பட்டது. பெங்களூரில் பிரபல இயக்குநர் நாகபரணா தலைமையில் பத்து பேர் கொண்ட குழுவினர் படத்தைப் பார்த்தனர். படம் பார்த்து முடித்த பிறகு படம் மிகவும் சிறப்பாக உள்ளதென ஒட்டுமொத்த குழுவினரும் பாராட்டினர். மேலும் 'இந்தப்படம் கண்டிப்பாக வெளியே வரவேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்'. அதேநேரம் சில காட்சிகள் மற்றும் வசனங்கள் நீக்க அல்லது ம்யூட் செய்யவேண்டும். குறிப்பாக "ஆன்டி இண்டியன்" எனும் டைட்டிலை மாற்றிவிட்டு வேறு டைட்டில் வைக்க வேண்டும் என கூறியுள்ளதாக கூறப்பட்டது.

நடிகர் கபாலி எனும் வசனம் அடிக்கடி வருகிறது. அப்பெயரைக் கொண்ட வசனம் வரும் காட்சிகள் அனைத்தையும் நீக்க வேண்டும். கமுக, அகமுக என்று வரும் இரண்டு கட்சிகளின் பெயர்களையும் நீக்கவேண்டும். இப்படத்தில் வரும் தேசியக்கட்சி அரசியல்வாதி கேரக்டர் ஒன்றின் பெயர் 'ராஜா' என்று இருக்கிறது. அந்த பெயரையும் நீக்க வேண்டும்' என்று அக்குழுவினர் பத்து பேரும் ஒரே முடிவாக கூறினர்.

38 கட்டுகள் போடவேண்டும் என கூறப்பட்ட நிலையில், தற்போது பெரிதாக கட் எதுவும் இல்லாமல், யு / ஏ சான்றிதழ் கொடுத்துள்ளதாகவும், அடுத்த மாதம் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகும் என தெரிகிறது. ஒருவழியாக இந்த படத்தின் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதால், எப்போது ரிலீஸ் மற்றும் மற்ற தகவல்கள் வெளியாகும் என்பது... பலரது எதிர்பார்ப்பு என கூறலாம்.