bjp promote mersal movie
மெர்சல் படம் வெளி வருவதற்கு பல தடைகள் இருந்தது, அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்து ஒரு வழியாக சொன்ன தேதியன்றே வெளியானதால் ரசிகர்கள் குஷியாகினர்.
இதைத் தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத போது பாஜக வினர். இந்தத் திரைப்படத்தில் GST , டிஜிட்டல் இந்தியா போன்றவற்றைப் பற்றி விஜய் பேசியுள்ள வசனத்தை நீக்க வேண்டும் எனக் கூறி போர்க் கொடி தூக்கினர்.
இந்தப் பிரச்சனை பெரிதாக வெடிக்க, இந்த வசனத்திற்காகவே பலர் இந்தப் படத்தை பார்த்தே தீர வேண்டும் என எண்ணி வலைத்தளம் மூலம் டிக்கெட் புக் செய்துள்ளனர். இதனால் இன்று மற்றும் நாளை அனைத்து திரையரங்கங்களிலும் அனைத்து மெர்சல் காட்சிகளும் புக் ஆகியுள்ளது.
இந்த வசனத்தைப் பற்றி பாஜக வினர் ஒருவேளை பேசாமல் இருந்திருந்தால் இந்தப் படம் ஹிட் மட்டும் தான் ஆகி இருக்கும். ஆனால் இப்போது சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. மேலும் இது குறித்து பேசிப் பேசியே காசே வாங்காமல் மெர்சலுக்கு விளம்பரம் செய்துள்ளனர் பாஜக வினர் என்று தான் கூறவேண்டும்.
