'பி.ஜே.பி. கட்சியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் இனி பூமியில் கால் படாமல் புஷ்பக விமானங்களில் மட்டுமே பயணம் செய்யவேண்டும்’என்று நக்கல் அடித்திருக்கிறார் ‘மூடர் கூடம்’ படத்தின் இயக்குநர் நவீன்.

‘மூடர் கூடம்’ படத்தின் மூலம் பிரபலமான நவீன் தற்போது ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ என்ற படத்தை இயக்கி அதில் முக்கிய பாத்திரத்தில் நடித்தும் வருகிறார். கஜா புயல் நிவாரணப்பணிகளில் கமல் அர்ப்பணிப்பாக ஈடுபட்டுவருவது தொடர்பாக அவரை ஆதரித்து வருகிறார்.

இந்நிலையில் நிவாரணப்பணிகளுக்கு மத்தியில் கமல் ஒரு தென்னை மரத்தின் மீது கால்வைத்து நின்று கொண்டிருக்கும் படத்தை வெளியிட்டு பாஜகவின் இளைஞர் அணி தலைவர் வினோத் பி.செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், “எதுக்கு இந்த வெட்டி பந்தா..? உன்னுடைய அடுத்த பட போஸ்டருக்கு தென்னை மரம்தான் கிடைத்ததா..? தென்னை மரம் ஒவ்வொரு விவசாயிக்கும் பிள்ளை போல, அதை மிதித்து போஸ் கொடுக்கும் நீங்களா மக்களை காக்கப்போகிறீர்கள்” என்று கூறியுள்ளார்.

அக்கருத்தைக் கண்டு கொதித்த இயக்குநர் நவீன்...அடப்பாவிகளா. நீங்க வாழ்க்கைல தென்னமரத்துமேல கால வச்சு போஸ் குடுத்ததே இல்லனு சொல்லுங்க. அப்புறம் ஏண்டா தாயா வணங்குற பூமாதேவி மேல கால் வச்சி நடக்கறீங்க. புஷ்பக விமானமேறி பறந்து போக வேண்டியதுதான' என்று பா.ஜ.க.வினரை கடுமையாகச் சாடியுள்ளார்.