அனைத்து மொழி சினிமாக்களிலுமே கண்டிப்பாக சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. சினிமாக்காரர்கள் நல்ல விஷயதாம் செய்தலும் அது பரவலாக பேசப்படும் அதே போல் எந்த ஓரு தவறு செய்தலும் அது பிரபலமாகிவிடும்.
அந்த வகையில், மேரி கோம், பாஜிராவ் மஸ்தானி போன்ற வாழ்க்கை வரலாறு படங்களை படமாக இயக்கிய பிறன்பல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, தற்போது ராணி பத்மாவதி வாழ்க்கை வரலாற்றை பத்மாவதி என்கிற பெயரில் படமாக எடுத்து வருகிறார்.
இந்த படத்தில் ராணியாக தீபிகா படுகோன் நடிக்கிறார், கதாநாயகனாக ஷாஹித் கபூர் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தில் ராணியின் கதாபாத்திரத்தை தவறாக சித்தரித்ததாக கூறி, படப்பிடிப்பிலேயே பன்சாலி தாக்கப்பட்டார்.
இது குறித்து தற்போது பா.ஜ.க நிர்வாகி அகிலேஷ் என்பவர் கூறும்போது பன்சாலியை யார் செருப்பால் அடிக்கிறார்களோ, அவர்களுக்கு ரூ 10,000 தருகிறேன் என கூறியுள்ளார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
