Asianet News TamilAsianet News Tamil

Biryani : தெறிக்கவிட்ட பிரியாணி பிரியர்கள் ..ஸ்விகி வெளியிட்ட செம அப்டேட்.....

இந்த வருட ஆர்டர் செய்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள உணவு குறித்து ஸ்விக்கி வெளியிட்டுள்ளது.

Biryani is topped in the swiggy order
Author
Chennai, First Published Dec 23, 2021, 12:27 PM IST

2021ஆம் ஆண்டில் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் குறித்த ரிப்போர்ட்டை ஸ்விகி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், “இந்த ஆண்டு ஸ்விகியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு பட்டியலில் சிக்கன் பிரியாணி முதல் இடத்தை பிடித்துள்ளது. 

இந்த பட்டியலில் ஒரு நிமிடத்திற்கு 115 பிரியாணிகளும் ஒரு செகண்டிற்கு 2 பிரியாணிகளும் ஆர்டர் செய்யப்படுகின்றன. கடந்த 2020 ஆம் ஆண்டில் நிமிடத்திற்கு 90 பிரியாணிகள் மட்டுமே ஆர்டர் செய்யப்பட்டன. 

இப்போது அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வெஜிடபிள் பிரியாணியை பொருத்தவரை சிக்கன் பிரியாணியை விட 4.3 மடங்கு குறைவாக ஆர்டர் செய்யப்பட்டது. கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், லக்னோ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சிக்கன் பிரியாணியை மிகவும் விரும்பி ஆர்டர் செய்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் 60 மில்லியன் சிக்கன் ஆர்டர்கள் ஸ்விகியில் செய்யப்பட்டுள்ளது. இதை ஸ்விகி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. 

இந்த செய்தியால் பிரியாணி பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்..ஆனால் தமிழகத்தின் பாரம்பரிய உணவுகளை தமிழர்கள் மறந்து விட்டதாகவே தெரிகிறது. இதனால் வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் சுற்றுலா பயணிகள் பிரியாணியை நமது பாரம்பரிய உணவாக நினைக்க கூடும் என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios