birthday wishes for varalakshmi
பிரபல நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி இன்று தனது பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்.
அவருக்கு தமிழ், மலையாள சக கலைஞர்கள் நேரிலும், தொலைபேசியிலும், சமூக வலைத்தளத்தின் மூலம் பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
2012ஆம் ஆண்டில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த 'போடா போடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானவர் வரலட்சுமி.
பின்னர் தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் 'தாரை தப்பட்டை' படத்தால் பட்டை தீட்டப்பட்டார் வரலட்சுமி. 'தாரை தப்பட்டை' படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் இந்த படத்தில் வரலட்சுமியின் நடிப்பை பாராட்டாத ஊடகங்களே இல்லை என்று கூறலாம்
தற்போது 'நிபுணன்', 'அம்மாயி', 'சத்யா', 'விக்ரம் வேதா' ஆகிய படங்களில் நடித்து பிசியான நடிகைகளில் ஒருவராக இருக்கும் வரலட்சுமி நடிப்பு மட்டுமின்றி சமூக சிந்தனையும் நிறைந்தவர். சமீபத்தில் நடிகை பாவனாவுக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்த வரலட்சுமி, நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்காக 'சேவ் சக்தி' என்ற அமைப்பை தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இவருக்கு நியூஸ் பாஸ்ட் சர்ர்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
