Bindu Madhavi who was sent by God for Oviya - Sripriya

ஓவியாவுக்காக கடவுளால் அனுப்பப்பட்டவர் பிந்து மாதவி என்று நடிகை ஸ்ரீப்ரியா கூறியுள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் புதுசு புதுசா டாஸ்க் கொடுக்கப்பட்டு அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசும் கொடுக்கப்படுகிறது.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் யாருக்குமே பிடிக்காதவர்கள் யாரென்றால் அது ஜூலியும், காயத்ரியும் தான். இதில் பிக்பாஸ் குடும்பத்திற்குள் பிந்து மாதவி புதுசா வந்துள்ளார்.

இந்த நிலைய்ல் “பிந்து மாதவிக்கு காயத்ரி மற்றும் ஜூலியை பற்றி நன்கு தெரியும். அதனால் தான், அவரை நாமினேட் செய்துள்ளார். ஓவியாவிற்காக கடவுள் தான் பிந்து மாதவியை அனுப்பி வைத்துள்ளார்” என்று நடிகை ஸ்ரீபிரியா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், புதிதாக கூட்டணி வைத்துள்ள காயத்ரி, ஜூலி ரைசா! மூன்று தேவிகள் என்று கிண்டலடித்து உள்ளார்.