கடந்த இரண்டு நாட்களாக, பிக் பாஸ் குடும்பத்தின் போட்டியாளர்கள், மதுரை குடும்பம் மற்றும் NRI குடும்பமாக பிரிந்து பிந்து மற்றும் ஹரீஷ் ஆகிய இருவருக்கும் திருமணம் செய்துவைக்கும் முயற்சியை டாஸ்காக எடுத்துக்கொண்டு விளையாடி வருகின்றனர்.

இந்த டாஸ்க் இன்று நிறைவு பெற்றது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில், ஹரீஷிடம் நீங்கள் இதையெல்லாம் செய்தது டாஸ்கால்தானா என கேட்கிறார் பிந்து. அதற்கு ஹரீஷும் ஆம் டாஸ்க் என்றதால் தான் செய்தேன் என்று கூறினார்.

உடனே வையாபுரி இவர்கள் இருவருக்கும் இடையே பஞ்சாயத்து செய்து வைப்பது போல் ஒரு சில காட்சிகள் இடம்பெறுகிறது. பின் ஹரீஷ் சோபாவில் அமர்ந்து பிந்துவுடன் பேசும்போது என் மேல்தான் தவறு இருப்பது போல் தெரிகிறது. என்னால்தான் இந்த பிரச்சனை வந்தது என வருத்தமாக கூறுகிறார். 

ஒரு வேலை இதையும் டாஸ்காக எடுத்துக்கொண்டு தான் பிந்து இப்படி ஹரீஷிடம் கூறினாரா? அல்லது உண்மையில் இவர் ஹரீஷை காதலிக்கிறாரா என இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும்.