கழுகு, கேடிபில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், பசங்க 2 உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகை பிந்துமாதவி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொழிலதிபர் மற்றும் தயாரிப்பாளரான நடிகை திரிஷாவின் முன்னாள் காதலர் வருண்மணியத்தை காதலிப்பதாக கூறப்பட்டது.
அதற்கு ஏற்றாப்போல் இவரும் தன்னுடைய பேஸ் புக் பக்கத்தில் வருண் மணியத்துடன் கட்டி பிடித்தது போல இருக்கும் பல புகைபடங்களை போஸ்ட் செய்திருந்தார்.
ஆனால் வருண்மணியம் இது நட்பு ரீதியாக எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் தான் இப்போது யாரையும் காதலிக்கவும் இல்லை திருமணம் செய்து கொள்ளும் எண்ணமும் இல்லை என கூறினார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் நடித்த அணைத்து படங்களும் அவருக்கு ஓரளவிற்கு கைகொடுத்துள்ளதால் மீண்டும் தன்னுடைய கவனத்தை நடிப்பில் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
