பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது புதிய போட்டியாளராக களமிறங்கி இருப்பவர் நடிகை பிந்து மாதவி. இவர் உள்ளே வரும் போதே தனக்கு நிகரான போட்டியாளர் ஓவியா தான் என கமலஹாசனிடம் கூறினார்.

இதைதொடர்ந்து பிந்து மாதவியிடம் 1 முதல் 9 வரையிலான எண்கள் எழுதப்பட்ட அட்டைகள் கொடுக்கப்பட்டது. இதில் முதல் எண்னை அதிகமாக பிடித்தவருக்கு கொடுக்க ஆரம்பித்து குறைவாக பிடித்தவர் வரை கொடுக்கவேண்டும்.

பிந்து மாதவி ஓவியாவுக்கு ஒன்றாம் எண்ணை கொடுத்து முதலில் அவரை தான் தனக்கு பிடிக்கும் என்றும் சொல்லாமல் சொல்லினார். 2 ஆரவிற்கும், 3 சினேகன், 4 கணேஷ் , 5 சக்தி, 6 வையாபுரி, 7 ரைசா, 8 காயத்ரி , 9 ஜூலி ஆகியோருக்கு இந்த எண்களை அணிவித்தார்.

இதன் மூலம் தனக்கு மிகவும் பிடித்தவர் ஓவியா எனறும் பிடிக்காதவர் ஜூலி என்றும் சொல்லாமல் எண்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் பிந்து மாதவி.