நடிகை திரிஷாவை நிச்சயதார்த்தம் வரை செய்து பின் பிரிந்தவர் வருண் மணியன். இவரும், நடிகை பிந்து மாதவியும் நெருங்கி இருப்பது போல் சமீபத்தில் புகைப்படங்கள் வெளியாகின. இதனால் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்றும் விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார்கள் என்று கூறப்பட்டன.

இந்நிலையில் வருண் மணியன் இதுகுறித்து பேசும்போது, நான் சில நண்பர்களுடன் கடந்த மாதம் மாலத்தீவுகளுக்கு சென்றேன். பிந்து மாதவியும் வந்திருந்தார், மாலத்தீவில் நாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தான் அவர் வெளியிட்டார்.

நான் பிந்து மாதவியை காதலிக்கவும் இல்லை, அவரை திருமணம் செய்யப் போவதும் இல்லை என்று கூறியுள்ளார் வருண் மணியன்.