”சர்கார்” சாதனையை முறியடிக்க துடிக்கும் “பிகில்”...அதிரவைக்கும் அரபு நாட்டு வசூல்...! 

விஜய் நடிப்பில் வெளியான “பிகில்” திரைப்படம் அரபு நாடுகளையே அதிரவைக்கும் அளவிற்கு வசூல் சாதனை படைத்துள்ளது. அந்த ப்ளாக்பஸ்டர் கலெக்‌ஷன், ”சர்கார்” சாதனையை முறியடித்து அதிரடி காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த “பிகில்” திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த 25ம் தேதி ரிலீஸ் ஆன “பிகில்” திரைப்படம் 3 நாட்களில் 100 கோடி ரூபாய் வரை அதிரடி வசூல் செய்துள்ளது. 

தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த “பிகில்” திரைப்படத்திற்கு ஆரம்பத்தில் நெகட்டீவ் கமெண்ட்கள் கிடைத்த போதிலும், தற்போது படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் எல்லாம் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி அதிகமுறை ரூ.100 கோடி வசூல் செய்து, பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுத்த நடிகர் என்ற பெருமையையும் “பிகில்” திரைப்படம் மூலம் விஜய்க்கு கிடைத்துள்ளது.  மேலும் விஜய்யின் பல படங்கள் வெளிநாடுகளில் செய்த வசூல் சாதனைகளையும் “பிகில்” திரைப்படம் மெர்சலாக முறியடித்து வருகிறது. 

அதிலும் குறிப்பாக அரபு நாடுகளில் “பிகில்” திரைப்படம் ரூ.15 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு கண்டிப்பாக “பிகில்” திரைப்படம் 20 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்பதால், ”சர்கார்” சாதனையை முறியடிக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஏனென்றால் அரபு நாடுகளில் சர்கார் திரைப்படம் ரூ.16 கோடி மட்டுமே வசூல் செய்திருந்த நிலையில், 3 நாட்களில் “பிகில்” வசூல் சூடுபிடிக்கத் தொடங்கியதே இதற்கு காரணம்.