விஜய்யின் 63ஆவது படத்தின் தலைப்பு ‘பிகில்’ போஸ்டரில் ஜெர்சி அணிந்தபடி ஃபுட்பாலுடன் ஸ்டைலாக தோற்றமளிக்கும் விஜய்யும், மீன் மார்க்கெட் பின்னணியில் மற்றொரு விஜய்யும் அமர்ந்திருக்கும் இடம் பெற்றுள்ளனர். இந்த போஸ்டரில், இரு வேடங்களில் விஜய், கால்பந்தாட்ட வீரர் உடையில் யூத் விஜய், இன்னொரு விஜய் மீன் சந்தையில், கருப்பு சட்டை - காவி வேட்டி அணிந்து நாற்காலியில் மிரட்டலான லுக்கில் கம்பீரமாக உட்கார்ந்துள்ளார். அவருக்கு முன்னால் கறி வெட்ட பயன்படுத்தும் ஒரு மரக்கட்டை, அதன் மீது கறி வெட்டும் கத்தி உள்ளது. 

இந்நிலையில் இந்த போஸ்டரை பார்த்த நெட்டிசன்கள் அலசி ஆராய்ந்து பிகில் படக் கதையை கண்டுவிடுத்துள்ளனர். இந்த போட்ஸ்ட்ரைப் பார்த்த விஜய் ரசிகர்களோ தந்தை மகன் என இரண்டு விஜய் உள்ளதாக குஷியில் உள்ளனர். ஆனால் போஸ்டரில் உள்ள சில குறியீடுகளை வைத்துப் பார்க்கும்போது ஒரே விஜய் தான் என சொல்கிறார்கள் நெட்டிசன்கள்.

*போஸ்டரில் விஜய்யின் கால்களில் ஒரே மாதிரியான காயத்தின் வடு 

*இருவரது தாடி மற்றும் தோற்றம் ஒரே மாதிரியாக இருப்பது. ஆனால் விஜய் ரசிகர்களோ விஜய்க்கு இரண்டு கேரக்டர்கள் தான். அந்த காயம் எடிட்டிங் மிஸ்டேக்காக இருக்கலாம் என சொல்கிறார்கள்.

விளையாட்டு வீரராக விஜய் ’5’ஆம் எண் கொண்ட ஜெர்சி அணிந்திருந்தாலும், விஜய்க்கு விளையாடும் வேலை இல்லை. ஃப்ளாஷ்பேக்கிலும் சரி, நிகழ்காலக் கதையிலும் சரி விஜய் விளையாடுவது போன்ற காட்சி இல்லை. இதில், பெண்கள் அணியின் பயிற்சியாளராக மட்டுமே விஜய் வருகிறார். ஒரு காலத்தில் திறமையான வீரராக இருக்கும் விஜய்க்கு, வாய்ப்பு கிடைக்காததால் அவர் மீனவ குப்பத்தில் தனது குடும்பத்த தொழிலை கவனிக்கிறார். திறமையான கோச் தேடிக்கொண்டிருக்கும்போது முன்னாள் வீரரான விஜய்யை தேடிச் சென்று பயிற்சியாளராக வருமாறு கேட்கின்றனர். அதன் பிறகே அவர் பெண்கள் டீம்  கோச்சாக மாறுவார் என ஒரு கதை உலாவருகிறது.