இயக்குனர் அட்லி இயக்கத்தில், விஜய் மூன்றாவது முறையாக நடித்து வரும் திரைப்படம் 'பிகில்' இந்த படத்தின் அப்டேட் பற்றிய தகவல்களை ஒவ்வொரு நாளும், விஜய் ரசிகர்கள் தொடர்ந்து படக்குழுவினரிடம் கேட்டு வருகிறார்கள். 

அப்பா - மகன் என, இரண்டு வேடங்களில்  நடித்து வரும் விஜய்யின், பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக், அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது.  இந்நிலையில் சமீபத்தில் மூன்றாவது போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதே போல் 'வெறித்தனம்' என்கிற பாடலை முதல்முறையாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் விஜய் பாடல் உள்ள தகவலை படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்டிருந்தார்.  இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'சிங்க பெண்ணே' என்கிற பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் லீக் ஆகியுள்ளது, படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

"சிங்கம் பெண்ணே...  சிங்கர் பெண்ணே... ஆணினமே உன்னை வணங்கும்... என தொடங்கும் இந்த பாடல் வரிகள் சமூக வளையதலத்தில் வைரலாக பரவி வருகிறது.  இதனால் இயக்குனர் அட்லீ மட்டுமின்றி விஜய் ரசிகர்கள் பலரும் அதிச்சியடைந்துள்ளனர்.  

இந்த படத்தில் நீண்ட இடைவேளைக்குப்பின் நடிகை நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் ஜாக்கி ஷராஃப்.  விவேக், இந்துஜா, டேனியல் பாலாஜி, பூவையார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.