இயக்குனர் அட்லி இயக்கத்தில், விஜய் நடித்து வரும் 'பிகில்' திரைப்படம் 150 நாட்களில் முடிக்க படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், 200 நாட்களைத் தாண்டி இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்று கொண்டிருக்கிறது.  

இந்த படத்திற்காக 400 டெக்னீஷியன்கள் மற்றும் 1000 துணை நடிகர்களுடன் பிரம்மாண்ட செட் அமைத்து படப்பிடிப்பை ஷூட் செய்து வருகிறார். இயக்குனர் அட்லி. 80 சதவீதத்திற்கும் அதிகமான காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், மற்றொரு புறம் போஸ்ட் புரோடக்ஷன் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,  இந்த படத்தை தயாரித்து வரும் கல்பாத்தி அர்ச்சனா,  அவ்வபோது 'பிகில்' படம் பற்றி, அப்டேட்ஸ் கேட்டுக்கொண்டே இருக்கும் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக, நேற்று இரவு, அவருடைய ட்விட்டர் பக்கத்தில் 'பிகில்' படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தினார்.

குறிப்பாக தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ள தகவல் போஸ்டரில் போடப்பட்டிருந்தது. என இந்த போஸ்டரை உடனடியாக விஜய்யின் ரசிகர்கள் வைரலாகும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த போஸ்டரில் ரசிகர்களே இந்த விஷயத்தை கவனித்தீர்களா? விஜய்யின், இரண்டு பக்கங்களிலும், யோகி பாபு மற்றும் நடிகர் ஆனந்தராஜ் நிற்கின்றனர். இவர்கள் பின்னால் நிற்கும், வில்லன் நடிகர்கள்... கையில், கத்தி உள்ளிட்ட பல ஆயுதங்களோடு உள்ளனர்.