நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பிகில் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகியது. ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பில் இருந்த இந்த படத்திற்கு சிறப்பு காட்சிகள் சம்பந்தமாக அரசு சார்பாக இதுவரையிலும் நெருக்கடி இருந்து வந்த நிலையில் 25ம் தேதி அதிகாலை அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகியது.

பெண்கள் கால்பந்து விளையாட்டு அணியை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ராயப்பன், மைக்கெல் பிகில் என இரு கதாபாத்திரங்களில் விஜய் நடித்திருக்கிறார். கில்லியில் கபடியை முன்னிலை படுத்தியது போன்று பிகிலில் கால்பந்து விளையாட்டை ஊக்கப்படுத்தும் விதமாக தளபதி விஜய் நடித்திருப்பதாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

படம் வெளியாகுவதற்கு முன்பே 136 .55 கோடி வசூல் செய்த நிலையில் தற்போது 9 நாட்களில் பிகில் திரைப்படம் சென்னையில் மட்டும் 10 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது. இதனால் ரஜினிக்கு பிறகு அதிக முறை ரூ 10 கோடி வசூல் சாதனையில் இணைந்தது விஜய் மட்டும் தான் என்பது கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் பிகில் திரைப்படம் 100 கோடி வசூல் செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் ரூ.100 கோடி வசூல் செய்த முதல்படம் என்ற பெருமையை பிகில் படம் பெற்றுள்ளது. சர்வதேச அளவில் ரூ.200 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

கைதி திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றிந்தபோதிலும் வசூல் ரீதியாக அந்த படம் பெரிய வெற்றியை அடையவில்லை என்று விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.