'மேயாத மான்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை இந்துஜா. பக்கா தமிழ் பெண்ணான இவர், 'மெர்குரி', 'பூமராங்', 'மகாமுனி' உள்ளிட்ட பல படங்களில் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். 

கடைசியாக, 'தளபதி' விஜய் நடிப்பில் வெளியான 'பிகில்' படத்தில் வேம்பு என்ற கேரக்டரில் கால்பந்து வீராங்கனையாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். 


இருந்தாலும், இந்துஜாவால் தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தைப் பிடிக்க முடியவில்லை. தற்போது, விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்கும் 'காக்கி' படம் மட்டுமே அவர் கைவசம் உள்ளது. 

இதனால் பட வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக விதவிதமான உடைகளில் ரகரகமான போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். 

மேலும் பேஷன் ஷோக்களிலும், விளம்பரங்களுக்கு மாடலாகவும் பணியாற்றி வருகிறார். அப்படி சமீபத்தில் விளம்பரம் ஒன்றிற்காக கறுப்பு நிற ஹாட் உடையில் இந்துஜா பங்கேற்றுள்ள கலக்கல் போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

முற்றிலும் மாறுபட்ட மேக்கப் மற்றும் நகைகளில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் இந்துஜா. அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள அந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் பலரும் இந்துஜாவா? இது என வாய்பிளக்கின்றனர். 


அப்படியொரு ஹாட் லுக்கில் இந்துஜா ஷேர் செய்துள்ள அந்த புகைப்படங்கள் நெருப்பில்லாமலே சோசியல் மீடியாவில் தீப்பற்ற வைத்துள்ளது.