இளயதளபதி விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் வரும் 19 ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படம் தாபாவளிக்க வெளியாக உள்ள நிலையில் இந்த தகவலால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

அட்லியின் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடத்துள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் தந்தை மகன் என இரண்டு கேரக்டர்களில் டிபுள் ஆக்ஸன் செய்துள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதுவரை வெளியான  இரண்டு பாடல்கள் ரசிகர்களிடையே மத்தியில் சக்கைபோடு போட்டுவருகிறது. வெறித்தனம்  என்ற பாடல் யூடியூபில்  இதுவரை 1 கோடிபேர் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துவருகிறது. 

இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் படம் தொடர்பான கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்து வருகிறது. இந்நிலையில் படத்தின் அதிராகப்பூர்வ டீசர் மற்றும் பாடல்கள் வரும் 19 ஆம் தேதி வெளியிட்டு அதிரடி கிளப்ப படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் வரும் 19 ஆம் தேதி வெளியாகும் என்ற தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.  டீசரை வெளியா உடன் அதை கொண்டாடவும்,ட்ரெண்டிங் அடித்து தூள்கிளப்பவும்  அவரின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.