Asianet News TamilAsianet News Tamil

BiggBoss Ultimate : எதிர்பாக்கலேல.... பிக்பாஸில் கெத்தாக என்ட்ரி கொடுத்த சிம்பு - வைரலாகும் புரோமோ வீடியோ

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கமலுக்கு பதில் சிம்பு தொகுத்து வழங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதற்காக பிரத்யேகமான புரோமோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். 

BiggBoss Ultimate new host simbu promo
Author
Tamil Nadu, First Published Feb 24, 2022, 1:00 PM IST

தமிழில் தற்போது முதன்முறையாக ஓடிடி தளத்துக்காக மட்டும் பிரத்யேகமாக பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சி ஒன்று நடத்தப்படுகிறது. ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்துக்காக நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். பிக்பாஸ் அல்டிமேட் என பெயரிடப்பட்டு உள்ள, இந்நிகழ்ச்சி 24 மணிநேரமும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலமடைவதற்கு முக்கிய காரணம் கமல்ஹாசன் (KamalHaasan) தான். அவர் தொகுத்து வழங்கும் விதம் ரசிகர்களை மிகவும் கவர்ந்ததால் இதுவரை நடந்து முடிந்த 5 சீசன்களையும் அவரே தொகுத்து வழங்கினார். அதுமட்டுமின்றி தற்போது நடந்து வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் அவர் தான் தொகுத்து வழங்கி வந்தார்.

BiggBoss Ultimate new host simbu promo

கடந்த 3 வாரங்களாக இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல், கடந்த வாரத்துடன் இந்நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரின் இந்த முடிவுக்கு காரணம் பணிச்சுமை தான். இடைவிடாத படப்பிடிப்பு மற்றும் அரசியல் பணிகள் என தொடர்ந்து பிசியாக இயங்கி வருவதால், பிக்பாஸில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக கமல் (Kamal) அறிவித்தார். கமல் திடீரென விலகியதால் அவருக்கு பதில் யார் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.

இந்நிலையில், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கமலுக்கு பதில் சிம்பு தொகுத்து வழங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதற்காக பிரத்யேகமான புரோமோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அதில் கோர்ட் சூட் அணிந்து செம்ம ஸ்டைலிஷாக இருக்கும் சிம்பு சோபாவில் கெத்தாக அமர்ந்தபடி இருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இறுதியில், ‘எதிர்பாக்கலேல... நானே எதிர்பாக்கல... பாக்கலாமா’ என சிரித்தபடி பேசுகிறார். இந்த புரோமோ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios