பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம், போட்டியாளர்கள் ஹீரோ... ஹீரோயின்... கெட்டப்புகள் போட்டு கொண்டு, அவரவருடைய பாடல்கள் வரும் போது அதற்கு நடனமாடினர்.

அதை தொடந்து, இன்றைய ப்ரோமோவில், பிக்பாஸ் மொட்டை கடுதாசி என்கிற டாஸ்கை கொடுத்துள்ளார். இதன் மூலம், போட்டியாளர்கள் அவரவர் மனதில் உள்ள கேள்விகளை ஒரு பேப்பரில் எழுதி, அதை ஒரு பாக்ஸில் போடவேண்டும். இந்த டாஸ்க் பற்றி கவின் தெரிவிக்கிறார்.

இதைத்தொடர்ந்து, அப்படி எழுதி போடப்பட்ட, கடிதங்களுக்கு போட்டியாளர்கள் பதிலளிக்கிறார். லாஸ்லியா பற்றிய கேள்விக்கு அவர் பதில் கூறுகையில், நான் எப்போதுமே அன்பாகத்தான் இருப்பேன் என கூறுகிறார்.

பின் சாண்டி கவினை பார்த்து, உண்மையில் கவின் - சாக்ஷி நடுவே இருப்பது என்ன என கேட்க, இதற்கு கவின் 'இப்போ அவங்க மேல் உள்ளது என்ன என்று தனக்கு தெரியவில்லை என கூறுகிறார்". இந்த பதிலுக்கு பின் கவின் மற்றும் சாக்ஷி இருவரும் கதறி அழும் காட்சி முதல் ப்ரோமோவில் காட்டப்படுகிறது.