நேற்றைய தினம் பிக்பாஸ் வீட்டில், குழந்தைகள் போல் மழலை தனத்துடன் போட்டியாளர்கள் ஒரு பக்கம், ஜாலியாக இருந்தாலும், ரணகளமான சில சண்டைகளும் வந்து ஓய்ந்தது.  சாதாரணமாக கஸ்தூரி ஏதோ கூற வர, வனிதா சட்டென்று கோபத்தில் வந்து தன்னை குண்டு என சொல்கிறீர்களா,  என கத்திய தோடு நான் 3 ,  குழந்தைகளுக்கு அம்மா. எனக்கு 18 வயதில் ஒரு மகன் இருக்கிறான். என வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வந்தார்.

இதற்கு கஸ்தூரி தான் கூற வந்த விஷயத்தை சொல்ல முயன்றும் அதனை காது கொடுத்துக் கூட கேட்காமல், அந்த இடத்தில் இருந்து புறப்பட்டார் வனிதா.  

இந்நிலையில் இதே போன்ற சண்டை தற்போது கிச்சனில் கஸ்தூரி மற்றும் வனிதாவுக்கு இடையே வருகிறது. இருவரும் கிச்சனில் சமைத்துக் கொண்டிருக்க,  நீங்கள் ஒரு கான்பிடென்ட்  லேடி, உங்களுக்கு ஏன் இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறது என கஸ்தூரி கேட்க, இதற்கு வனிதா நான் என்ன சொல்கிறேன் என்பது உங்களுக்கு புரியவில்லையா? என சமைத்துக் கொண்டே கேட்கிறார்.

பின் சேரன் நாய் போல் குரைக்கும் காட்சியில் காட்டப்படுகிறது. இதை  தொடர்ந்து கஸ்தூரி நீங்கள் சொன்னது சும்மாவா என வனிதாவை பார்த்து கேட்கிறார்.  இதற்கு வனிதா பதில் கொடுப்பதற்குள்...  லாஸ்லியா, முகேன் நாய் மற்றும் பூனை மாதிரி கத்துகிறார்கள். 

கஸ்தூரி, நீங்கள் தான் குண்டாக இருப்பதாகவும் மூன்று குழந்தைக்கு அம்மா என சொல்கிறீர்கள் என்று வனிதாவிடம் கூற,  கவின் சாண்டி இருவரும் அடிபட்ட நாய் எப்படி கத்தி கொண்டு ஓடுமோ அதே போல் சத்தமிட்டு காட்டுகிறார்கள். 

இரண்டாவதாக வெளியாகியுள்ள இந்த ப்ரோமோவில், கஸ்தூரி - வனிதா இருவரும், நாய் போல் சண்டையிட்டு கொள்கிறார்கள் என்பதை நக்கலாக கூறி இருக்கிறதோ பிக்பாஸ்? என்கிற சந்தேகம் பலருக்கும் வந்துவிட்டது.

அந்த ப்ரோமோ இதோ: