பிக்பாஸ் இறுதி சுற்றில் 5 போட்டியாளர்கள் இருந்த நிலையில், சோம் சேகரை, பிக்பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னரான முகேன் வெளியே அழைத்து வந்தார். இவரை தொடர்ந்து அடுத்ததாக, பிக்பாஸ் வீட்டில் உள்ளே இருந்த கடைசி பெண் போட்டியாளரான ரம்யா பாண்டியன் வெளியேறியுள்ளார்.

இவரை அழைத்து செல்வதற்காக, கவின் உள்ளே சென்றார். சில நிமிடங்கள் போட்டியாளர்களுடன் பேசிய கவினை வரவேற்ற பிக்பாஸ், செய்தி தாள்கள் பல இடத்தில் கிழித்து வைக்கப்பட்டுள்ளது. அதில் இந்த பிக்பாஸ் வீட்டில் அடுத்ததாக யார் வெளியேறவுள்ளார் என்கிற தகவலும் உள்ளது என அறிவித்தார்.

அனைத்து செய்தி தாள்களையும் ஒன்று சேர்த்து பார்த்ததில், ரம்யாவின் பெயர் இடம்பெறவே, மிகவும் மகிழ்ச்சியாக அனைவரிடமும் இருந்து ரம்யா விடைபெற்றார். பின்னர் கமலை சந்தித்து பேசிய தனக்கு ஓட்டு போட்டு இவ்வளவு தூரம் கொண்டு வந்த மக்கள் அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். 

மேலும் இவருடைய பெற்றோர் மற்றும் சகோதரர் பேசிய போது ரம்யாவை பார்த்து மிகவும் பெருமையாக உள்ளது என கூறினார்கள். அதே நேரத்தில் பிக்பாஸிடம் இருந்து சிங்க பெண் என்கிற விருதையும் பெற்றுக்கொண்டு மேடையில் இருந்து சிரித்து கொண்டே விடைபெற்றார் ரம்யா பாண்டியன்.