பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இன்றுடன் முடிவடைய உள்ளது. இந்த நிகழ்ச்சி ஆரம்பமான நாளில் இருந்தே பல்வேறு பிரச்சனைகளுடன் சென்றுகொண்டிருந்த நிலையில்,  இறுதி நாளான இன்று சந்தோஷமாகவே முடிவடைய உள்ளது. தொடர்ந்து 6 மணிநேரம் பிக்பாஸ் ஒளிபரப்பாகும் என நிகழ்ச்சியாளர்கள் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

நிகழ்ச்சி துவங்கியதும்,  பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்கள் மற்றும், தற்போது பிக்பாஸ் வீட்டின் உள்ளே உள்ள போட்டியாளர்களின் குடும்பங்களை சந்தித்து கமல் பேசியதோடு, பிக்பாஸ் இறுதி சுற்றில் உள்ள 5 போட்டியாளர்களுக்கும் தன்னுடைய சார்பில் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் பரிசு ஒன்றையும் வழங்கினார்.

இதை தொடர்ந்து, பிக்பாஸ் சீசன் 3 , போட்டியாளரான முகேன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார். பிக்பாஸ் டைட்டில் வெற்றியாளருக்கு வழங்க உள்ள வெற்றி கோப்பையுடன் என்ட்ரி கொடுத்த முகேன், கமலிடம் உரையாடிய பின்னர் தன்னுடைய கையில் இருந்த கோப்பையை, வெளியே இருந்த அனைத்து போட்டியாளர்கள் கைகளிலும் பிடித்து பார்க்கும் படி கமல் கூறினார்.

பின்னர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த முகேனை வரவேற்ற பிக்பாஸ், முகேனிடம் உள்ளே உள்ள போட்டியாளர்கள் அனைவருடைய கையிலும் அக்சஸ் கார்டு ஒன்றை கையில் கொடுத்து விளையாடிய பின்னர், மாஸ்க் ஒன்றையும் கொடுத்து விளையாட செய்தார். கடைசியில் கார்டு ஒன்றை ஸ்கேன் செய்து பார்த்த போது, 5 போட்டியாளர்களின் இருந்து சோம் சேகர் வெளியேற்றப்பட்டார்.

முகேன், சோம் சேகரை அழைத்து சொல்லும் போது, கடைசியாக குட்டி ஸ்டோரி பாடல், பிக்பாஸ் சொல்லாமலே போறீங்களே என்று கலாய்த்து மிகவும் மகிழ்ச்சியாக ரம்யாவிற்கு கியூட் கிப்ட் ஒன்றையும் கொடுத்து விட்டு சென்றார்.