பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்கள் அனைவருமே, ஆரி ஒருவரை பற்று குறை சொல்லியே தன்னை நல்லவராக காட்டி கொள்கிறார் என்கிற கருத்தை முன்வைத்து வருகிறார்கள். இவர்களை இன்னும் குதூகலமாக்கும் வகையில் குறை சொல்லும் டாஸ்க்கை பிக்பாஸ் கொடுக்க ஒருவரை மாறி ஒருவர் ஆரியை போட்டு தாக்கும் வீடியோ தான் தற்போது வெளியாகியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில், சோம் பேசும் போது, சிரித்து கொண்டே வாழை பழத்தில் ஊசியை ஏற்றுவது போல்,  ‘குறைசொல்லும் டாஸ்க் இப்போதுதான் வந்துள்ளது ஆனால் முதல் நாளிலிருந்தே இந்த வீட்டில் ஆரி தான் குறை சொல்வதை நான் பார்த்துள்ளேன் என்று கூறுகிறார்.

தொடர்ந்து பேசும் அவர், என்னிடம் மற்றவர்களைப் பற்றிக் குறைகூறி பேசியுள்ளாய். அதேபோல் என்னை பற்றி மற்றவர்களிடம் பேசியிருக்க மாட்டாய் என்பது என்ன நிச்சயம்? என்று கேள்வி கேட்க அதற்கு ஆரி, ‘ஆம் எல்லாரிடமும் எல்லாரும் பற்றியும் பேசி இருக்கிறேன் என்று ஒப்புக்கொண்டார். அதற்கு நான் முடித்து விடுகிறேன் என்று கூறி அதன்பின் தொடர்கிறார் திரும்பவும் சோம் பேசியுள்ளார்.

அதன் பின்னர் வரும் ரியோ, ‘ஆரி சொல்ல வந்த விஷயத்தை மட்டும் சுருக்கமாக சொல்லி விட்டு போய்விட்டார் என்றால் அவருக்கு எதிராக யாருமே இருக்க முடியாது. மற்றவர்களுக்கு நம்மை பிடிக்க வேண்டும் என்ற எண்ணமும் அதற்கான முயற்சியும் உங்கள் வாழ்க்கையில் போட்டீர்கள் என்றால் அது உங்கள் வாழ்க்கையை மிகவும் அழகானதாக மாற்றும் என்று நினைக்கிறேன் என்று சொல்கிறார்.

ஆக ரியோ, சோம் ஆகிய இருவருமே ஆரி குறித்தே குறை சொல்லியுள்ளார்கள். இவர்கள் குறையாக கூறும் இந்த விஷயங்கள், வெளியில் இருந்து பார்வையாளராக பார்த்தல், சாதாரணமானதாகவே தெரிகிறது. காரணம் மக்களுக்கு ஏற்கனவே தெரிந்த விஷயங்களை, மக்களின் பார்வையில் தான், ஏதேனும் ஒரு விஷயத்தை முன்வைக்கிறார். அதை தான் குறை செய்வதாக இவர்கள் கூறுகிறார்களோ..? உண்மையில் ஆரி பேசியது போல் அவரை பின்னல் சென்று பலர் பேசியுள்ளனர் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

தற்போது வெளியாகியுள்ள புரோமோ இதோ...