பிக்பாஸ் வீட்டில் அடுக்கடுக்கான பல பிரச்சனைகள் வந்து ஓய்ந்த நிலையில், தற்போது வனிதா மீண்டும் உள்ளே சென்றுள்ளதால், பழைய பிரச்சனைகள் கூட மீண்டும் புதிய பிரச்சனையாக வெடித்தது. இதில் சிக்கி மன உளைச்சலுக்கு ஆளாகி வெளியேறியவர் என்றால் அது நடிகை மதுமிதா தான்.

இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில், போட்டியாளர்கள் அனைவரும் ஸ்கூல் பிள்ளைகளாக மாறியுள்ளனர். 

இது லக்சூரி பட்ஜெட் டாஸ்காக இருக்க வாய்ப்புள்ளது. அதாவது இதில் ஷெரின், லாஸ்லியா, வனிதா, சாண்டி, முகேன், தர்ஷன் ஆகியோர் பள்ளி குழந்தைகளாக மாறியுள்ளனர். கஸ்தூரி டீச்சராக மாறியுள்ளார்.  கையில் குடை, சேலை  என கடலோர கவிதைகள் ஜெனிபர் டீச்சர் ரேஞ்சுக்கு என்ட்ரி கொடுக்கிறார். சேரன் தலைமை ஆசிரியர் பொறுப்பை ஏற்றுள்ளதாக தெரிகிறது. 

இந்த டாஸ்கில், அனைத்து போட்டியாளர்களும் குழந்தையாக மாறி, ஓவருவரை ஒருவர் அடித்து விளையாடுவது, சண்டை போடுவது, மழலை தனம் கலந்து பேசுவது என சுவாரஸ்யம் சேர்த்துள்ளனர். 

இதுகுறித்த ப்ரோமோ இதோ: