Asianet News TamilAsianet News Tamil

திரையரங்கில் வெளியாகும் ஹர்பஜன் சிங் - லாஸ்லியா நடித்த 'Friendship' திரைப்படம்!! ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

பிக்பாஸ் லாஸ்லியா, மற்றும் ஹர்பஜன் சிங் இணைந்து நடித்துள்ள, 'Friendship' படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
 

biggboss losliya acting friendship movie release date announced
Author
Chennai, First Published Sep 4, 2021, 6:56 PM IST

பிக்பாஸ் லாஸ்லியா, மற்றும் ஹர்பஜன் சிங் இணைந்து நடித்துள்ள, 'Friendship' படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானவர் இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்த பிரபலங்களில் மக்களை அதிகப்படியாக கவர்ந்த இவருக்கு தான், பிக்பாஸ் சீசன் 3  நிகழ்ச்சியில் முதல் முதலில் ஆர்மி துவங்கப்பட்டது. எப்படியும் டைட்டில் வின்னராக மாறுவார் என அனைவரும் எதிர்பார்த்தாலும், இவர் லவ் டிராக்குக்கு மாறியதால் இவரது வெற்றி வாய்ப்பு குறைத்து. எனினும் 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்த பின்னர் வெளியேறினார். 

biggboss losliya acting friendship movie release date announced

பிக்பாஸ் வீட்டை விட்டு வந்த வேகத்தில் இவருக்கு சில பட வாய்ப்புகள் வர துவங்கினாலும் லாஸ்லியா முதலில் நடிக்க ஒப்புக்கொண்டது இந்திய வீரர் ஹர்பஜன் சிங்குடன் நடிக்க வந்த வாய்ப்பை தான். சி.எஸ்.கே அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்க உள்ள, 'Friednship ' படத்தின் பணிகள் முன்பே முடிவடைந்து விட்டாலும், கொரோனா பிரச்சனை காரணமாக இந்த படத்தை படக்குழுவினர் வெளியிடாமல் இருந்தனர்.

biggboss losliya acting friendship movie release date announced

தற்போது கொரோனா பிரச்சனை கட்டுக்குள் வந்து, மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்தடுத்து திரையரங்கில் புது புது படங்கள் ரிலீஸ் ஆக துவங்கியுள்ளது. அந்த வகையில், 'Friendship ' படத்தை, செப்டம்பர் 17 ஆம் தேதி, வெளியிட உள்ளதாக... படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தில் ஆக்க்ஷன் கிங் அர்ஜுனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். 

biggboss losliya acting friendship movie release date announced

ஏற்கனவே நண்பர்கள் தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் டீசர் வெளியான போது, ஹர்பஜன் சிங் கிரிக்கெட்டராகவே நடிக்கிறார் என்பது தெரிந்தது. மேலும் ஆக்ஷன், காமெடி என அனைத்திலும் தூள் கிளப்பி இருந்தார். இந்த படத்தை ஜான் பால் ராஜ் & ஷாம் சூர்யா ஆகியோர் இயக்குகின்றனர். ஜெ.பி.ஆர் & ஸ்டாலின் இந்த படத்தை தயாரிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios