'கனா காணும் காலங்கள்', சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி பின், சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையனாக வந்து ரசிகர்கள் மனதை வேட்டையாடியவர் கவின். வெள்ளித்திரையில் ஜொலிக்க வேண்டும் என்கிற கனவு இவருக்குள்ளும் அதிகமாவே இருந்ததால், திரைப்படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரத்தில் நடிக்க துவங்கி 'நட்புன்னா என்னனு தெரியுமா' படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார்.

ஒரு சில காரணங்களால் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.

இதை தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் பிரபலமாகலாம் என்கிற கனவில், கடந்த ஆண்டு நடந்து முடிந்த 'பிக்பாஸ் சீசன் 3 ' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார்.

ஆரம்பத்தில் இவரின் செயல்கள் ரசிகர்களை செம்ம கடுப்பாக்கினாலும், போக போக... இவர் மீது பலருக்கும் நல்ல அபிப்பிராயம் பிறந்தது. மேலும் லாஸ்லியாவின் காதல் விஷயத்திலும் இவர் மிகவும் நேர்த்தியாக நடந்து கொண்டவிதம் அனைவரையும் கவர்ந்தது. 

ரசிகர்கள் பலரும் இவர் தான் பிக்பாஸ் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என, ஆசைப்பட்டும் லாஸ்லியா ஃபைனலுக்குள் போக வேண்டும் என, பிக்பாஸ் கொடுத்த 5 லட்ச ரூபாயை எடுத்து கொண்டு வெளியேறினார்.

தற்போது இவருக்கு சில படங்களில் நடிக்க, வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. அதே போல் சில இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். 

இது ஒரு புறம் இருக்க... மிகவும் எமோஷ்னல் ட்விட் ஒன்றை போட்டு... தன்னுடைய நண்பர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வதற்கு முன் எடுத்த புகைப்படத்தை ஷார் செய்துள்ளார் கவின்.

இந்த ட்விட்டரில் அவர் கூறியுள்ளதாவது... நான் பிபி வீட்டிற்குள் நுழைவதற்கு முந்தைய நாள்....  இந்தப் புகைப்படம் எனது நண்பர்களால் எடுக்கப்பட்டது. இது எனக்கு அதிர்ஷ்டம் தரும் விதமாக இருந்தது .. அந்த இரவில் இருந்து சில விஷயங்கள் எப்படி மாறிவிட்டன என்று திரும்பிப் பார்க்கிறேன் என கூறியுள்ளார்.