Asianet News TamilAsianet News Tamil

'தளபதி 65 ' பூஜையில் கலந்து கொண்ட பிக்பாஸ் கவின்... ஏன்? முதல்முறையாக விஜய்யுடன் இணையும் பிரபல நடிகர்!

விஜய் ரசிகர்கள் தளபதியின் 65வது படம் குறித்த தகவலுக்காக எதிர்பார்த்து கார்த்துக்கொண்டிருக்கும் நிலையில்  இந்த படத்தின் பூஜை இன்று போடப்பட்டது. இது குறித்த புகைப்படங்கள் காலை முதலே சோஷியல் மீடியாவில் வைரலாகி உள்ளது. அதே நேரத்தில்  'தளபதி 65 ' பட பூஜையில் பிக்பாஸ் கவின் கலந்து கொண்டுள்ளதால், இந்த படத்தில் அவர் நடிக்கிறாரா? என்ற சந்தேகம் தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
 

biggboss kavin attend vijay 65 movie poojai why?
Author
Chennai, First Published Mar 31, 2021, 7:20 PM IST

விஜய் ரசிகர்கள் தளபதியின் 65வது படம் குறித்த தகவலுக்காக எதிர்பார்த்து கார்த்துக்கொண்டிருக்கும் நிலையில்  இந்த படத்தின் பூஜை இன்று போடப்பட்டது. இது குறித்த புகைப்படங்கள் காலை முதலே சோஷியல் மீடியாவில் வைரலாகி உள்ளது. அதே நேரத்தில்  'தளபதி 65 ' பட பூஜையில் பிக்பாஸ் கவின் கலந்து கொண்டுள்ளதால், இந்த படத்தில் அவர் நடிக்கிறாரா? என்ற சந்தேகம் தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தளபதி விஜய், கடைசியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த வருடம் ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டிய நிலையில்  கொரோனா பிரச்சனை காரணமாக, இந்த வருடம் ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியாகி தளபதி பொங்கலாக கலக்கியது.  50 சதவீத பார்வையாளர்கள் திரையரங்குகளில் அனுமதிக்கப்பட்ட போதிலும், இரண்டே நாளில் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்ததாக படக்குழுவினர் தெரிவித்தனர். சுமார் 50 நாட்களுக்கு மேல் ஓடி சாதனையையும் படைத்தது.

biggboss kavin attend vijay 65 movie poojai why?

தளபதியின் இந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்ததாக விஜய் டாக்டர் மற்றும் கோலமாவு கோகிலா ஆகிய படங்களை இயக்கிய, இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிப்பது உறுதியான நிலையில், சமீபத்தில் ரஷ்யா சென்று சூட்டிங் லொகேஷன் பார்த்த  புகைப்படங்களையும் சமூகவலைதளத்தில் வெளியிட்டு இயக்குனர் தளபதி 65 படத்தின் அப்டேட் கொடுத்தார். மேலும் இந்த படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம், 'தளபதி 65 ' படத்தில் நடிக்க உள்ள நாயகி குறித்த தகவலையும் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

biggboss kavin attend vijay 65 movie poojai why?

இந்நிலையில்  இன்று சன் டிவி அலுவலகத்தில் மிக பிரமாண்டமாக 'தளபதி 65 ' படத்தின் பூஜை நடந்து முடிந்தது.  இதில் தளபதி விஜய், நடிகை பூஜா ஹெக்டே, உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.  அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வெற்றி பெறுவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட பிரபலமான கவினும் கலந்து கொண்டதால், இந்த படத்தில் அவர் விஜய்யுடன் நடிக்கிறாரா? என்கிற கேள்வி எழுந்தது.  இதுகுறித்த உண்மை தற்போது வெளியாகியுள்ளது.

biggboss kavin attend vijay 65 movie poojai why?

அதாவது கவின் தன்னுடைய நண்பர் 'தளபதி 65 ' படத்தில்  உதவி இயக்குனராக பணிபுரிவதால் அவரின் அழைப்பின் பேரிலேயே இந்த படத்தின் பூஜையில் கலந்து கொண்டதாகவும், மற்றபடி இந்த படத்தில் அவர் நடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.  இந்த படத்தின் பிரபல காமெடியன் விடிவி கணேஷ்  கலந்துகொண்டு உள்ளதால், முதல் முறையாக விஜய்யுடன் விடிவி கணேஷ் தன்னுடைய காமெடி ரகலைகளை எடுத்து விட்டு அசத்துவார் என்பதில் சந்தேகமில்லை.
 

Follow Us:
Download App:
  • android
  • ios