பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை பொறுத்தவரை, அவ்வப்போது போட்டியாளர்களுக்குள் பிரச்சனைகள் வந்து வந்து போனாலும், உடனடியாக அவர்கள் சமாதானமும் ஆகி விடுகிறார்கள். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் செய்யப்பட்டதா? என்கிற சந்தேகத்தில் சமூக வலைத்தளத்தில் பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

நேற்றைய தினம், பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தே இரண்டாவது நாளே, சுசி சுரேஷ் சக்ரவர்த்தியின் கோபத்திற்கு ஆளானார். இதனால் நேற்றைய தினம், சுரேஷ் சக்கரவர்த்தி பெயரை சுசி நாமினேட் செய்தார்.

இதை தொடர்ந்து, இன்றைய தினம் பிக்பாஸ் வீடு விவாத மன்றமாக மாறுகிறது. போட்டியாளர்களுக்கு, யாரிடம் கருத்து வேறுபாடு உள்ளதோ, அவர்களது பெயர் மற்றும் என்ன பிரச்சனை என்பதை ஒரு காகிதத்தில் எழுதி கண்ணாடி பெட்டிக்குள் போடவேண்டும். என பிக்பாஸ் கூறுகிறார்.

பின்னர், சுசித்ரா இரு தரப்பு கருத்துகளையும் கேட்டு நீதி வழங்குபவராக உள்ளார். இது குறித்த புரோமோ தான் தற்போது வெளியாகியுள்ளது.