பிக்பாஸ் நிகழ்ச்சியில், மற்ற நாட்களை விட தொகுப்பாளர் கமல்ஹாசன் வரும் இரண்டு நாட்கள், ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் மிகவும் எதிர்பாக்கப்படும் நாட்கள். எனவே இந்த இரண்டு நாட்களை பலர் பார்க்க மிஸ் பண்ணுவதே இல்லை.

இந்நிலையில் இன்று அகம் டிவி வழியாக, பிக்பாஸ் வீட்டிற்குள் விசிட் அடிக்க உள்ள கமல், அரசியல் கலந்து பிக்பாஸ் வீட்டில் தற்போதைய நிலையை பற்றி பேசும் புரோமோ வெளியாகியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள புரோமோவில் "போன வாரம் உள்ளே இருந்து ஒரு கேள்வி வந்துச்சு கவனிச்சீங்களா..? சினிமா தியேட்டர் எல்லாம் திறந்து விட்டார்களா என்று. இங்க மட்டும் குறைச்சல் இல்லை என பிக்பாஸ் வீட்டை காட்டி. ஒரு சினிமாவிற்கு வேண்டிய எல்லா கதம்பமும் உள்ளது என ஹாய்யாக பாப் கான் தின்று கொண்டே கூறுகிறார் கமல்.

கொஞ்சம் வீரம், மலர்ந்தும் மலராத காதல், அம்மா புள்ள செண்டிமெண்ட் நிறையா இருந்தது, பாசம் சும்மா பொங்கிடுச்சி என கூறுகிறார். பின்னர் இதற்கெல்லாம் உள்ளே பூடகமாக ஒரு அரசியல் உள்ளது என, வழக்கம் போல் தன்னுடைய அரசியல் வசங்களை பேசுகிறார். அரசியல் என்றால் மேடை வேண்டும் நின்று பேச வேண்டும் என கமல் கூறுவது முதல் புரோமோவில் வெளியாகியுள்ளது.

அந்த புரோமோ இதோ...