பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல் வருவதால், மற்ற நாட்களை விட இன்று மற்றும் நாளை, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். ஒரு வாரம் முழுக்க போட்டியாளர்கள் செய்த தவறுகள் சில வற்றை மறைமுகமாகவும், சிலவற்றை நேரடியாகவும் கூறி வெளுத்து வாங்குவார்.

தற்போது வெளியாகியுள்ள முதல் புரமோவில், ‘கொளுத்திப் போடணும் கொளுத்தி போடணும் என்று கூறியவர் கையிலே அடித்துவிட்டார், போட்டியாக இருக்க வேண்டியவர்கள் போடா வாடா என்று தரம் குறைந்துவிட்டார்கள்’ என்று கூறிவிட்டு பின்னர் கையில் இருக்கும் செங்கோலை காட்டி, ’இது யார் கையில் இருக்கணும்ங்கிறது ரொம்ப முக்கியம், இருக்கிற நிலைமையைப் பார்த்தால் நம்ம கையில தான் எடுக்கனும் போல இருக்கு’ என்று கூறி வழக்கம்போல் அரசியலை கோர்த்து பேசினார்.

இன்றைய தினம் பிக்பாஸ் கொடுத்துள்ள இந்த செங்கோலை வைத்து இன்று கமல்ஹாசன் தனது விசாரணை வலையத்திற்குள், சனம் மற்றும் சுரேஷை கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் சனத்தை மெல்லமாக தான் அடித்தார் என்று மக்கள் தொடர்ந்து கூறி வருவதால், குறும்படம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இன்றைய தினம் காப்பாற்ற பட்டவர் பட்டியலில் அதிக வாக்குகளை பெற்று காப்பாற்ற படும் நபர்கள் பட்டியலில் சுரேஷ் முதலிடத்தில் இருக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.