விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் எதிர்பாராத பல திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் நடிகை ஜாங்கிரி மதுமிதா, நேற்றைய தினம் தற்கொலைக்கு முயன்று, திடீர் என நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

மதுமிதா வெளியேறியதால் இன்றைய தினம் எவிக்ஷன் இருக்காது என்பதே, அனைவருடைய நினைப்பாங்க இருந்த நிலையில், தொகுப்பாளர் கமலஹாசன், இன்றைய தினம் அறிவித்தது போல், கண்டிப்பாக எவிக்ஷன் இருக்கும் என கூறும் காட்சி தற்போது ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில், கமல் என்ட்ரி காட்டப்படுகிறது பின் "உணர்ச்சிகள் கட்டுப்படுத்த பட வேண்டும், உணர்ச்சிகள் நம்மை கட்டு படைத்த கூடாது. ஒருவர் வெளியேற்றப்பட்டதால், நீங்கள் ஏற்பாடு செய்த எவிக்ஷன் இருக்காது என நினைக்க வேண்டாம் கண்டிப்பாக எவிக்ஷன் உறுதி என கூறுகிறார்.

இதனால், இன்றைய தினம் எவிக்ஷன் பட்டியலில் இடம் பெற்றுள்ள நபர்களில் ஒருவர் கண்டிப்பாக வெளியேற்றப்பட உள்ளார் என்பது இந்த ப்ரோமோ மூலம் உறுதியாகியுள்ளது.