Asianet News TamilAsianet News Tamil

பிக்பாஸ் பிரபலமான இளம் நடிகர் திடீர் மரணம்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

பிக்பாஸ் பிரபலமான இளம் நடிகர் திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

biggboss fame sudden death in heart attack
Author
Chennai, First Published Sep 2, 2021, 12:24 PM IST

பிக்பாஸ் பிரபலமான இளம் நடிகர் திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் துவங்க பிள்ளையார் சுழி போட்ட, இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின்,13 ஆவது சீசனில், கலந்து கொண்டு மிகவும் பொறுமையாகவும், நிதானமாகவும் விளையாடி... ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்து வெற்றி பெற்றவர் சித்தார்த் சுக்லா. இந்த நிகழ்ச்சியில் மூலம் இவருக்கு பல பெண் ரசிகைகள் உருவாகினர். குறிப்பாக இந்த நிகழ்ச்சி இவருடைய திரையுலக வாழ்க்கையிலும் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்து அடுத்தடுத்து பல படங்களில் இவர் கமிட் ஆகி நடிக்க வழிவகை செய்தது.

biggboss fame sudden death in heart attack

40 வயதே ஆகும் இவர் இன்று மாரடைப்பு காரணமாக உயரிழந்துள்ளது பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மாரடைப்பு காரணமாக மும்பையில் உள்ள கூப்பர் மருத்துவமனை உடனடியாக அனுமதிக்கப்பட்ட இவர், இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

biggboss fame sudden death in heart attack

இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில் சித்தார்த் தூங்குவதற்கு முன் சில மருந்துகளை உட்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். அப்படி மருந்துகள் சாப்பிட்டுவிட்டு படுத்த அவர் எழுந்திருக்கவில்லை. இதை அறிந்ததும் அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சித்தார்த் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக மருத்துவமனை உறுதி செய்தது.  மேலும் சித்தார்த் சுக்லாவின் பிரேதப் பரிசோதனை நடைபெற்று வருவதாகவும், உடல் விரைவில் வெளியேற்றப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

biggboss fame sudden death in heart attack

சித்தார்த் சுக்லாவுக்கு அவரது தாயார் ரீட்டா சுக்லா மற்றும் இரண்டு சகோதரிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios