பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமான ஒரு சில தினங்களில் இருந்தே... கண்டிப்பாக ஃபைனலுக்குள் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர்களில் ஒருவர்,  தர்ஷன். 

இவர் தான் பிக்பாஸ் டைட்டில் வென்று வருவார் என, மக்கள் மட்டும் அல்ல உள்ளே உள்ள பல பிரபலங்களும் நினைத்தனர். இப்படி டஃப் போட்டி கொடுத்த இவர், எதிர்பாராத வண்ணாக திடீர் என எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறினார். இதனால் தர்ஷனின் ஒட்டு மொத்த ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

தற்போது வரை, நிகழ்ச்சியாளர்கள் செய்த சதியால் தான், தர்ஷன் வெளியேற்ற பட்டு விட்டதாக பல ரசிகர்கள் கூறி வருகிறார்கள். 

இந்நிலையில் தர்ஷன் வெளியேற்ற பட்ட உடனே, நடிகர் கமலஹாசன் நடித்து வரும், இந்தியன் 2  படத்தில் கமிட் ஆகியுள்ளதாக சில தகவல்கள் மிகவும் வேகமாக பரவி வருகிறது. 

ஆனால் இதுகுறித்து உறுதியான தகவல் வெளியாகாததால், இது வதந்தியாக கூட இருக்க வாய்ப்பு உள்ளது என்பதே பரவலான கருத்தாக உள்ளது. மேலும் இந்த தகவல் உண்மையாக இருந்தால், இந்த வாய்ப்பு தர்ஷனுக்கு அடித்த அதிர்ஷ்டம் என்றே கூறலாம்.