பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் சம்யுக்தா வெளியேறிய நிலையில், தற்போது இந்த வாரத்திற்கான நாமினேஷன் படலம் நடைபெறுகிறது. இதில் வெளியேற்ற நினைக்கும் நபர்களை போட்டியாளராகள் காரணத்தோடு முதல் ப்ரோமோவில் நாமினேட் செய்தனர். இதில் ஷிவானி, ஆரி, சனம், ரம்யா ஆகியோர் பெயரை அதிக போட்டியாளர்கள் நாமினேட் செய்தனர்.

இதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில், பிக்பாஸ் இந்த வார நாமினேஷன் முடிவுகளை அறிவிக்கிறார்.

பேக்கேஜ்  வச்சிக்கிட்டு எல்லோரையும் தப்பா புரிஞ்சிக்கிறாரு, பிக்பாஸ் வீட்டின் நிம்மதியை கெடுக்குறாங்க, சிரிச்சிக்கிட்டே பேசி ஹர்ட் பன்றாங்க, பாலாவோட ஷடோலதான் இருக்காங்க என குறிப்பிட்ட வார்த்தைகளோடு நாமினேட் செய்யப்பட்ட பிரபலங்கள் பற்றி அறிவிக்கிறார்.

இதை தொடர்ந்து பாலா இது ரொம்ப தவறான செயல் என புலம்புவதும், ஷிவானி தன்னை நாமினேட் செய்ய வேறு காரணமே கிடைக்கலையா என பேசி கொண்டு உள்ளதும் இன்றைய புரோமோவில் வெளியாகியுள்ளது.

இது குறித்த ப்ரோமோ இதோ...