செய்தியாளராகவும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டு விளையாடிய அனிதா சம்பத்தின் தந்தை காலமாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளராகவும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டு விளையாடிய அனிதா சம்பத்தின் தந்தை காலமாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிரபலமானவர் அனிதா சம்பத். 2 .0 போன்ற சில படங்களில் செய்தியாளராகவே தோன்றி பிரபலமானார். இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமும் உள்ளது. ஆரம்ப காலத்தில் இருந்து மிகவும் கஷ்டப்பட்டு இந்த நிலையை எட்டிய அனிதா சம்பத், சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு விளையாடினார்.
மிகவும் விறுவிறுப்பான போட்டியாளரான இவர், ஆரி பற்றி விமர்சித்ததால் ரசிகர்கள் கோவத்திற்கு ஆளாகி.... கடந்த வாரம் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் முன்பு கூட தொகுப்பாளர் கமலஹாசனிடம் இந்த வருட ஆங்கில புத்தாண்டை குடும்பத்துடன் கொண்டாட வேண்டும் என்கிற ஆசையை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில், சந்தோஷமாக வெளியே வந்த, அனிதா சம்பத் குடும்பத்தில் இடி போல் நிகழ்ந்துள்ளது ஒரு துக்க சம்பவம். அனிதா சம்பத்தின் தந்தை ஆர்.சி.சம்பத் உடல்நல பிரச்சனை காரணமாக உயிரிழந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. . இவர் சிறந்த கதை ஆசிரியர். பல புத்தகங்களை எழுதியுள்ளார். நடிகர் கமலஹாசன் உட்பட பலர் அனிதா சம்பத் மரணத்திற்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்துள்ளனர்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 29, 2020, 11:33 AM IST