பிக்பாஸ் வீட்டில் பல எதிர்ப்பாராத டாஸ்குகளை வைத்து, போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார் பிக்பாஸ். அந்த வகையில் இந்த வாரம், பிக்பாஸ் தலைவராக ரியோ மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வாரத்திற்காக நாமினேசன் படலம் நேற்று நடந்தது.

இதில் அனிதா, பாலாஜி, ஆரி, நிஷா, சனம், ஜித்தன் ரமேஷ், சோம் ஆகிய 7 பேர் நாமினேட் செய்யப்பட்டனர். மற்றவர்கள் தப்பித்தோம்  என நிம்மதியாக இருந்த நிலையில், திடீரென நாமினேசனில் ஒரு திருப்பம் ஏற்பட்டது.

ஏற்கனவே எவிக்சன் பாஸ் என்ற ஒரு அறிவிப்பை கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிக்பாஸ் அறிவித்தார் அதில் ஆஜீத் வெற்றி பெற்று, வெளியேறும் நிலையில் இருந்த போது தப்பித்தார் என்பது அனைவரும் அறிந்தது தான். 

இந்த நிலையில் தற்போது திடீரென நாமினேஷன் டாப்புள் பாஸ் என்பதை பிக்பாஸ் அறிவித்தார். நாமினேசன் செய்யப்பட்ட ஏழு பேரில் ஒருவருக்கு இந்த பாஸ் கிடைத்தால் அவர்கள் நாமினேஷனில் இருந்து தப்பித்துக் கொண்டு அவருக்கு பதிலாக வேறு ஒருவரை நாமினேட் செய்யலாம் என்று பிக்பாஸ் அறிவித்துள்ளார்.

இதனை அடுத்து இந்த டாபுள் பாஸை பெறுவதற்கு ஏழு பேர்களும் ஆர்வம் கொண்டனர். இருப்பினும் கடைசி கட்டமாக நிஷா, சனம் மற்றும் அனிதா ஆகிய 3 பேர் பிடிவாதமாக இந்த டாப்புள் கார்டை பெறுவதில் இருந்தனர். கடைசி வரை விட்டுக்கொடுக்காமல் இருந்த நிஷா ஒரு வழியாக சமாதானமாகியதால் அனிதாவுக்கு டாப்புள் கார்ட் கிடைத்தது.

இந்த டாப்புள் கார்டை பயன்படுத்தி சம்யுக்தாவை நாமினேட் செய்வதாக அறிவித்தார் அனிதா. முன்னதாக இந்த பாஸ் கிடைத்தால் யாரை நாமினேட் செய்வோம் என்ற அறிவிப்பில் அனிதா, பாலாஜி, சனம் ஆகிய மூவருமே அர்ச்சனா குரூப்பில் உள்ளவர்களை தான் நாமினேட் செய்வதாக அறிவித்தனர் என்பதும் அதே போல் அனிதாவுக்கு அந்த கார்ட் கிடைத்ததும் அர்ச்சனா குருப்பில் உள்ள சம்யுக்தாவை நாமினேட் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது