விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 3 இல் இருந்து நேற்று வெளியேறிய போட்டியாளர் அபிராமி தற்போது மிகவும் பிஸியாக உள்ளார். வெளியேறிய ஒரே நாளில் மக்களின் அன்பில் நனைந்து உள்ளார். எங்கு சென்றாலும் அவருக்கு  பயங்கர வரவேற்பு கிடைக்கிறது. பொதுமக்கள் அவரை  பார்த்த உடன் ஆவலாக ஓடிவந்து செல்பி புகைப்படங்களை எடுத்துக் கொள்வதும், அவருடன் ஹாய் ஹாய் என சொல்லி கொள்வதுமாக உள்ளனர்.

இந்த நிலையில் இவர் பிக்பாஸ் வீட்டில் உள்ளபோது வெளியான அவர் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கையோடு நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்த அபிராமி மிகுந்த மகிழ்ச்சிக் குள்ளாகி உள்ளார். அதன் பின்னர் இது குறித்த ஒரு பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் "நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்ததை நினைத்து பெருமைப்படுகிறேன்.. என்னுடைய நன்றியை இயக்குனர் எச். வினோத்திற்கும், தயாரிப்பாளர் போனி கபூர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என டைப் செய்து பதிவிட்டுள்ளார்.