Asianet News TamilAsianet News Tamil

கல்யாண வீட்டில் பத்திகிட்டு எரியும் பிரச்சனை அடி தடி!! எதிர்பாராததை எதிர்பாருங்கள்!! பிக்பாஸ் புதிய புரோமோ!!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் புதிய புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
 

biggboss 2nd promo released
Author
Chennai, First Published Sep 3, 2021, 7:30 PM IST

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் புதிய புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் வெற்றி பெற்ற நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இதுவரை 4 சீசன்கள் சூப்பர் டூப்பராக நிறைவடைந்துள்ள நிலையில், 5வது சீசன் மீதான ஆர்வம் அதிகரித்து காணப்பட்டது. இடையில் எங்கே கொரோனா 3வது அலை வந்து தடையாகிவிடுமோ என்று கூட ரசிகர்கள் நினைத்து கொண்டிருந்த நிலையில் புரோமோவை வெளியிட்டு நிகழ்ச்சியை உறுதி செய்துள்ளது பிக்பாஸ் குழு.

biggboss 2nd promo released

பிக்பாஸ் சீசன் 5 குறித்த அதிகாரப்பூர்வ டீசரை விஜய் தொலைக்காட்சி கடந்த வாரம் வெளியிட்டது. இந்த டீசரில் நடிகரும், அரசியல்வாதியும், பிக்பாஸ் தொகுப்பாளரும் கமல்ஹாசன் தன் விக்ரம் பட டைட்டில் இசையோடு ''ஆரம்பிக்கலாமா?'' என தொடங்கிவைக்கிறார். சீசன் 5 ஸ்பெஷலாக பிக்பாஸ் கண் லோகோ பிங்க் நிறத்திற்கு மாறி கண்ணைப் பறிக்கிறது.  கண் வடிவ லோகோவினுள் ஸ்டார் விஜய் லோகோ குறியீடாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இதை தொடர்ந்து சற்று முன்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோ... யாரும் எதிர்பார்க்காத திருப்பங்களுடன் வெளியாகியுள்ளது. கல்யாண நாதஸ்வரத்துடன் துவங்கும் இந்த டீசரில் காலை 6 மணிக்கு, பாசத்தோடு துவங்கி, இரவு 7 :30 மணிக்கு வாய் சண்டை, கை கலப்பாக மாறி விட போகிறதோ... என நினைக்கும் அளவிற்கு வெளியாகியுள்ளது.

biggboss 2nd promo released

இந்த டீசர் பிக்பாஸ் சீசன் 5 , இதுவரை துவங்கப்பட்ட நிகழ்ச்சி போல் இனி இருக்காது, என கமல் 'எதிர்பாராததை எதிர்பாருங்கள்' என கூறுகிறார். 

விறுவிறுப்பாக வெளியாகியுள்ள இந்த புரோமோ இதோ...


 

 

Follow Us:
Download App:
  • android
  • ios