இவரை வரவேற்ற பிக்பாஸ் எந்த வெற்றியாளரை வெளியில் அழைத்து வர போகிறீர்கள் என கேட்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இறுதி கட்டத்தில் அல்டிமேட் :
சிம்பு தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் அல்டிமேட்டில் 4 போட்டியாளர்களுடன் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. ஆரம்பத்தில் வனிதா, அனிதா தாடி பாலாஜி, சுரேஷ் சக்ரவர்த்தி, ஜுலி, பாலாஜி முருகதாஸ், சுருதி, அபிராமி, அபிஷேக், அபிநவ், நிரூப், தாமரை என அறியப்பட்ட நபர்கள் இருந்தனர்.
பின்னர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் சுரேஷ் சக்ரவர்த்தி, கேபிஒய் சதீஸ், விஜய் டிவி புகழ் தீனா, சண்டி மற்றும் ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் வந்தனர்.
வெளியில் சென்ற போட்டியாளர்கள் :
கமல் விலகியதை அடுத்து வனிதா தன்னை வெளியேற்றுமாறு கதறியபடி தானாகவே வெளியில் சென்றுவிட்டார். இவரை அடுத்து உடல் நிலை கோளாறு ஏற்பட்ட காரணத்தால் சுரேஷ் சக்கரவர்த்தி வெளியில் சென்றுவிட்டார். அதோடு வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்த ராமயா பாண்டியன் தவிர மற்ற அனைவரும் எலிமினேட் ஆனார்கள் தற்போது 14 போட்டியாளர்களின் தாமரை, நிரூப், பாலாஜி, ரம்யா பாண்டியன் மட்டுமே மீதமுள்ளனர்.

பணத்துடன் வெளியேறிய போட்டியாளர் :
பணத்துடன் வெளியில் செல்லும் வாய்ப்பு அறிவிக்கப்பட்டது. தற்கான டாஸ்கில் சுருதி - ஜூலி இருவரும் கடும் போட்டியிட்டனர். முதலில் 3 லட்சத்துடன் அல்டிமேட் ஹவுஸுக்குள் வந்த பணப்பெட்டியில் மதிப்பு பின்னர் 15 லட்சமாக உயர்த்தப்பட்டது. பின்னர் சுருதி வெற்றி பெற்று 15 லட்சத்துடன் வெளியேறிவிட்டார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு ஜூலி எலிமினேட் செய்யப்பட்டார்.
கெஸ்ட் வருகை :
இறுதி கட்டத்தை நெருங்குவதை ஒட்டி எலிமினேட் ஆனா போட்டியாளர்கள், முந்தைய 5 சீசனில் இருந்த பிரியங்கா, பாவனி உள்ளிட்டோர் வந்துள்ளனர். இந்நிலையில் இன்று சீசன் 3 வின்னர் முகின் ராவ் அல்மேட் வீட்டிற்குள் வந்துள்ளார். இவரை கண்டஹவுஸ்மேட்ஸ் மகிழ்ச்சியில் குதிக்கின்றனர். பின்னர் இவரை வரவேற்ற பிக்பாஸ் எந்த வெற்றியாளரை வெளியில் அழைத்து வர போகிறீர்கள் என கேட்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
