இந்த வாரம் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேற இருக்கும் போட்டியாளர்கள் யார் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதில் குறைவான வாக்குகளுடன் சினேகன் இருக்கிறார்.
பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாதது பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சி. தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ள இந்நிகழ்ச்சி தற்போது புதிய புதுப்பொலிவுடன் ஓடிடி-க்காக நடத்தப்படுகிறது. தமிழில் முதன்முறையாக இவ்வாறு நடத்தப்படுவதால், இதனை பிரபலப்படுத்தும் விதமாக இதற்கு முன் நடந்து முடிந்த சீசன்களில் பரபரப்பாக பேசப்பட்ட போட்டியாளர்கள் 14 பேரை தேர்ந்தெடுத்து களமிறக்கி உள்ளனர்.
அதன்படி முதல் சீசனில் இருந்து சினேகன், ஜூலி, சுஜா வருணியும், இரண்டாவது சீசனில் இருந்து ஷாரிக்கும், தாடி பாலாஜியும், மூன்றாவது சீசனில் இருந்து அபிராமி, வனிதாவும், நான்காவது சீசனில் இருந்து அனிதா, பாலாஜி முருகதாஸ் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தியும், 5-வது சீசனில் இருந்து நிரூப், தாமரைச் செல்வி, சுருதி மற்றும் அபிநய் ஆகியோரும் பங்கேற்றனர்.

இதில் முதல் வார இறுதியில் சுரேஷ் சக்ரவர்த்தியும் (Suresh chakravathy), இரண்டாவது வார இறுதியில் சுஜா வருணியும் (suja varunee), மூன்றாவது வார இறுதியில் ஷாரிக் மற்றும் அபிநய் ஆகியோர் எலிமினேட் ஆகினர். இதுதவிர கடந்த வாரம் வனிதா தானாகவே வெளியேறினார். அவருக்கு பதில் வைல்டு கார்டு எண்ட்ரியாக சதீஷ் உள்ளே சென்றார்.
இந்நிலையில் இந்த வாரம் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேற இருக்கும் போட்டியாளர்கள் யார் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதில் குறைவான வாக்குகளுடன் சினேகன் இருக்கிறார். அவருக்கு அடுத்து தாடி பாலாஜி, அபிராமி உள்ளார்கள். எனவே இந்த வாரம் சினேகன் அல்லது தாடி பாலாஜி வெளியேற வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
