பிக்பாஸ் 2 சீசன் டிவி நிகழ்ச்சியில், நடிகையின் மார்பகத்தை, நடிகர்  தொட்டதாக, சர்ச்சை கிளம்பியுள்ளது. பிக்பாஸ் என்ற பெயரில், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில், டிவி ரியாலிட்டி ஷோ கடந்த ஓராண்டாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதில் ஆபாசம் நிறைந்துள்ளதாகக் கூறி முதல் சீசனுக்கே பல தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், 2-வது சீசன் தற்போது தொடங்கியுள்ளது. இந்த முறையும், தமிழ், தெலுங்கு மொழிகளில், ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆபாசம் கூடுதலாக உள்ளதென்று, விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். இதன்படி, பிக்பாஸ் 2 தெலுங்கு சீசனில், டானிஷ், சுனைனா, பாபு, கவுசல், தீப்தி, நந்தினி, தேஜஸ்வி, பானுஸ்ரீ, அமித், சம்ரத், ரோல் ரிட்டா, கீதா, கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இவர்களில், நல்லது, கெட்டது என 2 குழுக்கள் பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு சமைப்பது உள்ளிட்ட டாஸ்க் தரப்படுகிறது. இதன் நேற்றைய நிகழ்ச்சியில், ஆப்பிள் ஒன்றை பானுஸ்ரீயின் சட்டைக்குள் ஒளித்து வைத்து, அதனை கவுசல் எடுக்கும்படி டாஸ்க் தரப்பட்டது. அப்போது, ஆப்பிளை எடுக்கும் சாக்கில் வேண்டுமென்றே பானுஸ்ரீயின் மார்பகத்தை, நடிகர் கவுசல் தொட்டு, சீண்டியதாகக் கூறப்படுகிறது. இதனை பானுஸ்ரீ நேரடியாக, பிக்பாஸிடம் புகார் தெரிவித்தார். எனினும், இதனை கவுசல் மறுத்தார். சட்டைக்குள் ஒளித்து வைத்த ஆப்பிளை எடுக்கும்போது தெரிந்தே மார்பகத்தில் கை வைத்து கவுசல் அழுத்தினார் என்று பானுஸ்ரீ தெரிவித்தார். இதனை பானுஸ்ரீ ஆணித்தரமாக, மீண்டும் மீண்டும் கூற, அவருக்கு சாட்சியாக தேஜஸ்வி ஆதரவு தெரிவித்துப் பேசினார். இதனால், இரண்டு தரப்புக்கும் இடையே காரசாரமாக வார்த்தைப் போர் வெடித்தது. இறுதியாக, வேறு வழியின்றி எதிர்பாராவிதமாக கை மார்பகத்தில் பட்டதாக கவுசல் ஒப்புக் கொண்டார். இதன்பேரில், கவுசல் மன்னிப்பு கோரினார். இந்த சம்பவத்தால் பிக்பாஸ் 2 சீசனுக்கு தெலுங்கிலும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.