Bigg Boss Tamil 5 promo : கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ள கமல் இந்த வாரம் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 5ன் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 

கமலுக்கு தொற்று ஏற்பட்டதன் காரணமாக அவர் கமிட்டாகியுள்ள விக்ரம், இந்தியன் 2 உள்ளிட்ட படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டன. அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமலுக்கு பதிலாக கடந்த வாரம் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். அந்த வாரத்தில் தீர்ப்பளித்திருந்த ரம்யா சரியாக போட்டியாளர்களை கவனிக்க வில்லை என்கிற புகார் எழுந்தது. அதோடு கமல் தொகுத்து வழங்குவது போலில்லை என ரசிகர்கள் பீல் செய்தனர். இதனால் இந்த வாரம் எப்படி போகப்போகுதோ என்னும் தவிப்பு ரசிகர்கள் மத்தியில் பற்றிக்கொண்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதை தொடர்ந்து இன்று காலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய கமல் உடனடியாக பிக் பாஸ் செட் போட்டுள்ள இவிபிக்கு சென்றுவிட்டார். அங்கு பேனர் வைத்து ரசிகர்கள் வரவேற்பு அளித்திருந்திருந்தார். இந்நிலையில் தற்போது கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

சென்ற வாரங்களில் எல்லா நாட்களும் ஹவுஸ்மேட்ஸ் சண்டையிட்டுக்கொண்டனர். அவரவர் நலனில் மாட்டுக்கே போட்டியாளர்கள் கவனம் செலுத்தியது அப்பட்டமாக தெரிந்ததுடன் தங்களுக்குள் டீம் அமைத்து கொண்டு பிரிந்து நிற்கின்றனர். பெண் போட்டியாளர்கள் அனைவரிடமும் ஆண் நண்பர்கள் குறித்த கேள்வியே எழுப்பப்பட்டு வந்தது. இது ரசிகர்களை சற்று முகம் சுளிக்க வைத்ததாகவே இருந்தது. இன்று நடைபெறும் பிக் பாஸ் இறுதி நாள் எபிசோட்டில் ஹவுஸ்மேட்டின் அனைத்து சேட்டைகளும் கமல் முடிவு காட்டுவார் என எதிர்பார்க்கபப்டுகிறது.

இது குறித்து ப்ரோமோவில் பேசியுள்ள கமல் தங்களுக்கென தன்னை யுகம், திட்டம் வகுத்து தனித்து நிற்கும் போட்டியாளர்களின் நிலைப்பாட்டிற்கான விளைவு இன்று இரவு தெரியும் என கூறியுள்ளார்.

YouTube video player