பிரபலங்களை ஒரே வீட்டில் 100 நாட்கள் ஒன்றாக தங்க வைத்து , அவர்களுக்கு சில டாஸ்குகளை கொடுத்து , அதன் பிறகு அவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்வதை காட்டுவது தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இது சாதாரணமாக இருந்தால் ரசிக்காது என்பதால் மசலாக்களை அவ்வப்போது தூவி கொஞ்சம் காரா சாரமாக்குவது இதில் பிக் பாஸின் வேலை. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் முத்ல் சீசன் யதார்த்தமாக இருந்ததாலும் முதல் முறை என்பதாலும் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது. ஆனால் இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் அப்படி இல்லை. 

கமல் பாஷையில் சொன்னால் பிக் பாஸ் நிறைய தகிடு தத்தம் செய்துதான் இம்முறை பிக் பாஸை நகர்த்தி கொண்டிருக்கிறார்.
பிக் பாஸ் செய்யும் இது போன்ற தகிடுதத்தங்களில் மிக பிரபலமானது தான் அவார்ட் கொடுப்பது. விருது என்பது ஒருவரின் நற்செயலை புகழ்வதற்காக, அங்கீகரிப்பதற்காக கொடுப்பது. ஆனால் பிக் பாஸ் கொடுக்கும் விருதுகள் ஒருவரின் குறைகள் என்ன என்பதை மட்டும் சொல்லி கொடுப்பது. இந்த விருதுகளால் வீட்டில் சண்டை சச்சரவு தான் மேலும் அதிகமாகும். அதும் ஒருவருக்கு யாரை பிடிக்கவில்லையோ அவர்தான் அந்த விருதை வழங்க வேண்டும் என்பது தான் பிக் பாஸ் லாஜிக்.
 

இதில் இம்முறை பிக் பாஸ் வீட்டில் ஐஸ்வர்யாவிற்கு மும்தாஜ் மீது கடும் கோபம் இருக்கிறது. அது தானாக வந்த கோபம் அல்ல பிறர் வரவழைத்த கோபம் . அந்த கோபத்தில் மும்தாஜிடம் மிகவும் மோசமாக கோபப்படுகிறார் ஐஸ்வர்யா.இதில் அவர்கையாலேயே மும்தாஜிற்கு விருது கொடுக்க சொல்லி இருக்கிறார் பிக் பாஸ்.அவரும் மும்தாஜ்க்கு விஷ பாம்பு எனும் விருதை அளித்திருக்கிறார்.  சிரித்த முகத்துடன் அதை பெற்று கொண்ட மும்தாஜ் ஐஸ்வர்யாவிற்கு கழுதை எனும் விருதை வழங்கி இருக்கிறார். 

அதாவது முட்டாள் என்ற அர்த்தத்தில். அதற்கு ஐஸ்வர்யா ஒரு முட்டாளிடம் அதை வாங்கி கொள்கிறேன் என்று கூறி மும்தாஜை முட்டாள் என்கிறார். பிக் பாஸில் சென்றாயனை நாய் என்று ஐஸ்வர்யா திட்டியதை கண்டித்த கமலுக்கு இப்படி விருது எனும் பெயரில் ஒருவரை கழுதை பாம்பு என்று அவமானப்படுத்துவது மட்டும் எந்த வகையில் சரி என்று படுகிறது என தெரியவில்லை. இது குறித்தி இந்த வாரம் யாராவது கேள்வி கேட்டால் நல்லது.கேட்காவிட்டால் ரொம்ப நல்லது .ஏன்னா அவர் கொடுக்கும் விளக்கம் அப்படி.