பிக் பாஸ் நிகழ்ச்சியில் இளசு முதல் முதல் பல்லு போன பெருசுங்க வரை ஏங்கி ஏங்கி ஜொள்ளுவிட வைக்கும் பேவரைட் போட்டியாளர் யார்னா? அது லாஸ்லியா மட்டும் தான். ஏற்கனவே தெரிந்த முகமாக இருந்த சண்டகோழி வனிதா, புளுகு மூட்டை மீரா, வெச பாட்டில் சாக்க்ஷி, ரஷ்யன் பொம்ம ஷெரின் போன்ற போட்டியாளர்கள் வீட்டில் இருந்தாலும் பார்வையாளர்கள் கண்களை தேடவைக்கும் போட்டியாளர் என்றால் அது இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா தான்.  

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது தமிழக இளசுகளின் கனவுக்கன்னியாக இருந்து வருபவர் லாஸ்லியா, பரீட்சயமில்லாத போதும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளார். இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா பல இளசுகளின் பேவரைட்.

ரசிகர்களையும் தாண்டி சக போட்டியாளர்களுக்கும் லாஸ்லியா தான் செல்ல குழந்தையாக இருந்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெறும் 24 மணி நேரத்திற்கு உள்ளாகவே சமூக வலைத்தளங்களில் ஆர்மிக்களை ஆரம்பித்துவிட்டனர் ரசிகர்கள். உலகெங்கும் உள்ள தமிழ்பேசும் மக்களிடம் நல்ல அறிமுகம் கொடுத்து உள்ளது பிக்பாஸ். அவரது சுபாவம் பிடித்து வயது பாகுபாடு இன்றி அனைத்துத் தரப்பிலும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ஏற்கனவே, லாஸ்லியாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் படு வைரலாக பரவி வருகிறது. அதே போல இவரது ஆர்மிகளும் இவரது அப்டேட்டுகளை தவறாமல் வெளியிட்டு வருகின்றனர். இவரது லாஸ்லியாவின் வீடியோகளை மட்டும் கட் செய்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டும் வருகின்றனர். லாஸ்லியாவிற்கு சமூக வலைத்தளத்தில் பல்வேறு அர்மிக்கள் இருப்பது தெரியும்.  அதிலும் உச்சகட்டமாக லாஸ்லியாவுக்கு பிளக்ஸ் வைத்து அதற்கு பாலாபிஷேகம் செய்து, குத்தாட்டம் போட்டு கொண்டாடி இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். இது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சினிமா ஸ்டார்களுக்கு கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வதை போல கொண்டாடித் தீர்த்தனர்.

இந்நிலையில், திருநெல்வேலியில் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. வழக்கமாக திருவிழா என்றால் இளசுகள் பெரும்பாலும் தனது ஆஸ்தான நடிகர்களின் போட்டோவைப் போட்டு ப்ளக்ஸ் அடித்து வைப்பது வழாக்கம், அந்த வரிசையில் லாஸ்லியா ரசிகர்கள் ப்ளக்ஸ் அடித்து ஊர் முழுவதும் ஒட்டியுள்ளனர்.

அந்த போஸ்டரில், அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் ஆனித் தேரோட்டத் திருவிழா" பெண்ணே உன்ன பார்த்தா போதும் வேற யாரும் வேணாம் லாஸ்லியா ஆர்மி திருநெல்வேலி" என போட்ட போஸ்டர்ஸ் திருவிழாவில் களைகட்டியது. இந்த போஸ்டரை பார்க்கும் பக்தர்கள் நெல்லையப்பர், காந்திமதி அம்மன் தேரோட்டம் போட்டோவை சின்னதா போட்டுட்டு, லாஸ்லியா படங்கள் பெருசா இருப்பதைப் பார்த்தவர்கள் கால கொடுமைடா என தலையில் அடித்துக்கொண்டு கடந்து செல்கின்றனர்.