கோவா சுற்றுலா சென்றுள்ள பிக்பாஸ் சிபி ..அங்கு அந்தரத்தில் விருந்துண்ணவும் வீடியோவை ஷேர் செய்துள்ளார்..
மாஸ்டர் படத்தில் விஜய்யின் மாணவனாக நடித்த சிபி புவனசந்திரன் கலந்துக் கொண்டுள்ளார். திருநெல்வேலியை சேர்ந்த இவர் கல்லூரி படிப்பிற்காக சென்னை வந்ததாகவும், பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து லண்டன் சென்று அங்கு நல்ல சம்பளத்தில் வேலை பார்த்ததாகவும் குறிப்பிட்டார். பின்னர் சினிமா மீதுள்ள ஆர்வத்தால் சென்னை திரும்பிய சிபி, அதை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.
கடந்த பிக்பாஸ் சீசன் 5-ல் போட்டியாளராக கலந்து கொண்ட சிபி.. ரூ.12 லட்சம் பணத்துடன் வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை நடந்து முடிந்த சீசன்களில் கேபி மற்றும் கவின் ஆகியோர் ரூ.5 லட்சம் எடுத்ததே அதிகபட்சமாக இருந்த நிலையில், தற்போது சிபி அதனை முறியடித்து, அதிக பணத்துடன் வெளியேறினார். இதையடுத்து ராஜு முதல் இடத்தையும்,பிரியங்கா, பாவனி முறையாக இரண்டாம் மூன்றாம் இடத்தை பிடித்தனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பிரபல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து கலக்கி வருகிறார் சிபி..இதற்கிடையே சூர்யாவுடன் ஒரு படத்தை நடித்து முடித்துள்ளதாக சிபி ஒரு பேட்டியில் கூறியிருந்தார்..அதோடு தனக்கு வாய்ப்பளித்த லோகேஷ் கனராஜுக்கும் அவர் நன்றிகளை தெரிவித்திருந்தார்..
இந்நிலையில் தனது நண்பர்களுடன் கோவாவிற்கு உல்லாச பயணம் சென்றுள்ள சிபி..அங்கு எடுத்துக்கொண்ட வீடியோக்களையும் ..போட்டோக்களையும் பகிர்ந்து வருகிறார்..அந்த வகையில் சுற்றுலாவின் போது..அந்தரத்தில் உணவளிக்கும் இடத்திற்கு சென்றுள்ள அவர்கள்..அங்கு சேஃப்டி சாப்பிட அமர்ந்திருக்கும் வீடியோவை ஷேர் செய்துள்ளார்..
