பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 75 நாட்களை நிகழ்ச்சி கடந்து விட்டதால், யார் இந்த நிகச்சியில் வெற்றி பெறுவார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.

அதற்கு ஏற்ற போல், ஒவ்வொரு வாரமும் டாஸ்குகள் மிகவும் கடுமையாகி கொண்டே போகிறது. வயல் கார்டு சுற்று மூலம் உள்ளே வந்த கஸ்தூரி, வந்த வேகத்தில் வெளியில் சென்றார். அவரை தொடர்ந்து, சிறப்பு விருந்தினராக உள்ளே வந்த வனிதா, வயல் கார்டு போட்டியாளராக மாறி, வழிய சென்று பல பிரச்சனைகளுக்கு அஸ்திவாரம் போட்டு வருகிறார். இதனால் மக்கள் அவர் மீது மீண்டும் செம்ம கடுப்பில் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டாலும், இந்த வாரம் கண்டிப்பாக எலிமினேஷன் உறுதி. அந்த வகையில் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டவர்கள் என்றால்,  சேரன், லாஸ்லியா, கவின், ஷெரின், முகேன் உள்ளிட்டோர்.

கடந்த வாரம் அதிக நபர்களால் நாமினேட் செய்யப்பட்டது கவினாக இருந்தும், ரசிகர்கள் மத்தியில் கவினுக்கு மிகப்பெரிய ஆதரவு உள்ளது. எனவே கண்டிப்பாக அவர் இந்த வாரம் வெளியாக வாய்ப்பில்லை. அதே போல், லாஸ்லியாவிற்கும் ஆதரவு கூடியுள்ளது. மீதம் இருக்கும் மூவரில், ஷெரின் மற்றும் முகேனுக்கு மக்கள் அதிகப்படியான வாக்குகள் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த வாரம் வெளியேற போகும் நபர் சேரனாக இருக்கவே வாய்ப்பு உள்ளது.

 மேலும், இதுவரை சீக்ரட் அறைக்கும் யாரும் செல்லாமல் இருப்பதால், ஒரு வேலை இந்த முறை சேரன் சீக்ரட் அறைக்கு செல்லும் வாய்ப்புகளும் அதிகமாகவே உள்ளது. என்ன நடக்கிறது என்பது இன்றைய தினம் தெரியவரும்.